Asianet News TamilAsianet News Tamil

ட்ரெண்டிங்கில் தெறிக்கவிட்ட “க்விட் பண்ணுடா”... தாறுமாறு வைரலாகும் அனிருத் மேஜிக்..!

அனிருத்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக மாஸ்டர் படத்தில் வரும் க்விட் பண்ணுடா பாடலின் லிரிக்கல் வீடியோ மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்கள்.

Anirudh Master special quit pannuda song lyric video going  viral
Author
Chennai, First Published Oct 16, 2020, 7:32 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி காம்பினேஷனில் தயாராகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. கொரோனா பிரச்சனையால் படம் இன்னும் வெளியாகவிட்டாலும், அவ்வப்போது அப்டேட்டுக்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடி வரும் அனிருத்திற்காக ‘மாஸ்டர்’ டீம் ஒரு ஸ்பெஷல்  விஷயத்தை அறிவித்திருந்தனர். 

Anirudh Master special quit pannuda song lyric video going  viral

அனிருத்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக மாஸ்டர் படத்தில் வரும் க்விட் பண்ணுடா பாடலின் லிரிக்கல் வீடியோ மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்கள்.இதையடுத்து காலை முதலே விஜய் ரசிகர்கள் க்விட் பண்ணுடா பாடல் பற்றியும், மாஸ்டர் படம் பற்றியும் விதவிதமான ஹேஷ்டேக்குகளை வைரலாக்கி வந்தனர். 

Anirudh Master special quit pannuda song lyric video going  viral

இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷுடன் நடித்துள்ள “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கதிர்... இந்த புகைப்படத்தை பார்த்திருக்கீங்களா?

ஏற்கனவே அறிவித்திருந்த படி சரியாக மாலை 6 மணிக்கு க்விட் பண்ணுடா என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. அனிருத் குரலில் அவர் இசையமைத்துள்ள என் ஜீவனே, என் போதையே, நீ போதும் என்று தோன்று நேரம் தான் என துவங்கும் லிரிக்கல் வீடியோ ரசிகர்களுக்கு மிகவும் கவர்ந்துள்ளது. இதையடுத்து #QuitPannuda #Thalapathyvijay ஆகிய ஹேஷ்டேக்குகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ லிரிக் வீடியோ... 

Follow Us:
Download App:
  • android
  • ios