- Home
- Cinema
- Box Office Report: சூர்யாவின் 'சீன்' முதல் நாளில் ரூ. 34+ கோடி வசூல்; திணறும் மூக்குத்தி அம்மன்-2; ராமாயணா வசூல் என்ன?
Box Office Report: சூர்யாவின் 'சீன்' முதல் நாளில் ரூ. 34+ கோடி வசூல்; திணறும் மூக்குத்தி அம்மன்-2; ராமாயணா வசூல் என்ன?
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான சூர்யா நடித்த ‘சீன்’ முதல் நாளில் ரூ. 34+ கோடி குவித்து சாதனை; ‘ராமாயணா’, ‘மூக்குத்தி அம்மன் 2’ படங்களின் முழு வசூல் நிலவரம் என்ன?

தீபாவளி பாக்ஸ் ஆபீஸ் வேட்டை!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான சூர்யாவின் 'சீன்', ரன்பீர் கபூர் - யஷ் கூட்டணியின் 'ராமாயணா: முதல் பாகம்' மற்றும் நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் 2' ஆகிய படங்களின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரங்கள் வெளியாகியுள்ளன.
சூர்யாவின் ‘சீன்’ முதல் நாள் வசூல் சாதனை
'கருப்பு', 'விஸ்வநாத் & சன்ஸ்' ஆகிய படங்களின் தொடர் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள மூன்றாவது திரைப்படம் 'சீன்'. மலையாளத்தில் 'ரோமஞ்சம்', 'ஆவேஷம்' படங்களை இயக்கிய ஜீது மாதவன் இப்படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.
கண் தெரியாத காவல் அதிகாரி டி.எஸ்.பி இன்பராஜாக சூர்யா நடித்துள்ளார். அவருடன் கதாநாயகியாக நஸ்ரியாவும், மிரட்டலான வில்லனாக நஸ்லெனும் தமிழில் களமிறங்கியுள்ளனர். இவர்களுடன் லால், ஆனந்த்ராஜ், இன்ஸ்டா பிரபலம் ராஜ்பிரியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் ஜோதிகா மற்றும் டொவினோ தாமஸின் சிறப்புத் தோற்றங்கள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன. வினித் அகஸ்டின் ஒளிப்பதிவு செய்ய, அஜ்மல் சபு படத்தொகுப்பு செய்துள்ளார்.
2டி என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் புதிய நிறுவனமான 'ழகரம்' சார்பில் சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் பட்ஜெட் சூர்யாவின் சம்பளம் இல்லாமல் ரூ. 30 கோடி எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூர்யாவின் சீன் படம் - பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்
உலகளவில் முதல் நாளில் தோராயமாக ரூ. 34.25 கோடி முதல் ரூ. 36+ கோடி வரை வசூலித்து உள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ. 22.25 கோடி வசூலித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் கடும் போட்டிக்கிடையே ரூ. 10 கோடிக்கும் மேல் வசூலாகியுள்ளது. மொழி வாரியாக தமிழ் பதிப்பில் ரூ. 19.15 கோடியும், 1,289 காட்சிகள் திரையிடப்பட்ட தெலுங்கு பதிப்பில் ரூ. 3 கோடியும் வசூலித்து உள்ளது.
முதல் நாளில் மட்டும் தோராயமாக 14,31,494 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. தொடர்ந்து சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தீபாவளி அரசு விடுமுறை உள்ளதால், திங்கட்கிழமைக்குள் படம் ரூ. 100 கோடி முதல் ரூ. 150 கோடி வசூலை எட்டும் என்றும், மொத்த வசூல் ரூ. 200 முதல் ரூ. 250 கோடியை எளிதில் கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
‘ராமாயணா: முதல் பாகம்’ 2-வது நாள் நிலவரம்
நமித் மல்கோத்ரா தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ராமாயணா' இரண்டு பாகங்களும் சேர்த்து ரூ. 4,000 கோடி புராஜெக்ட் என்றும், முதல் பாகத்தின் பட்ஜெட் மட்டுமே சுமார் ரூ. 2,000 கோடி என்றும் கூறப்படுகிறது.
படத்தில் ராமரை விட ராவணனாக நடித்த தயாரிப்பாளர் யஷ்ஷின் காட்சிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், ராவணனை கண்ணியமிக்கவனாக காட்டி உள்ளதாகவும் இணையத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன. முதல் நாளில் ரூ. 122 கோடி வசூல் என சாக்னிக் கணித்திருந்த நிலையில், படக்குழு அதிகாரப்பூர்வமாக ரூ. 155 கோடி வசூலானதாக அறிவித்தது.
2-வது நாளில் உலகளவில் மொத்த வசூல் ரூ. 221.05 கோடியைத் தொட்டுள்ளது. எனினும், வெளிநாடுகளில் 2-வது நாளில் வெறும் ரூ. 35 கோடியும், தமிழ் பதிப்பில் ரூ. 1.5 கோடியும் மட்டுமே வசூலாகியுள்ளது. இதனால் முதல் வார இறுதியில் ரூ. 500 கோடியை எட்டினாலும், மொத்த வசூலில் ரூ. 1,000 கோடியைத் தொடுவது கடினம் என வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ வசூலில் திணறல்!
ஐசரி கணேஷ் தயாரிப்பில் சுந்தர். சி இயக்கத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, துனியா விஜய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் ரூ. 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் வெளியான 'மூக்குத்தி அம்மன் 2' முதல் நாளில் மந்தமான வரவேற்பையே பெற்றுள்ளது.
2-ம் பாதியில் பிரம்மாண்ட சிஜி சண்டைக்காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும், சூர்யாவின் படப் போட்டியால் முதல் நாளில் இந்தியாவில் வெறும் ரூ. 1.75 கோடியும், உலகளவில் ரூ. 2.15 கோடியும் மட்டுமே வசூலித்துள்ளது. தமிழ்நாட்டைத் தாண்டி மற்ற பகுதிகளில் போதிய வரவேற்பு இல்லாததால், விடுமுறை நாட்களில் இப்படம் அதிகபட்சமாக ரூ. 10 முதல் ரூ. 20 கோடி வரை வசூலித்தாலே பெரிய விஷயம் என்றும், நயன்தாராவின் சம்பளமே ரூ. 10 கோடிக்கு மேல் என்பதால் அந்த அளவிற்காவது வசூல் ஈட்ட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.













