நடிகர் பிரஷாந்த் கடைசியாக, ஹிந்தியில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'ஜானி கேடர்' என்கிற படத்தின், தமிழ் ரீமேக்காக எடுக்கப்பட்ட ஜானி படத்தில் நடித்தார். ஆனால் இப்படம் தமிழில் படுதோல்வியை தழுவியது.

இதை தொடர்ந்து தற்போது பிரஷாந்த் ஹிந்தியில் வெற்றி பெற்ற மற்றொரு வெற்றிப்படமான 'அந்தாதூண்' படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார். இந்த படத்தை அவருடைய தந்தை தியாகராஜன் தயாரிக்கிறார். 

மேலும் செய்திகள்: வீரவாள் ஏந்தி தொண்டர்களோடு பிறந்தநாள் கொண்டாடிய பிரேமலதா விஜயகாந்த்!
 

இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான, இப்படத்தை தமிழில் இயக்குனர் மோகன் ராஜா இயக்க வாய்ப்புள்ளதாகவும்,  தபு நடித்த முக்கிய ரோலில், நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்க உள்ளதாகவும், ஹீரோயின் தேர்வு நடைபெற்ற வருவதாகவும் கூறப்பட்டது.

மேலும் செய்திகள்: சிவனேனு இருந்த இயக்குனரை 'தளபதி 65 ' பட வம்பில் சிக்கிய வைத்த செய்தி! இது யார் பார்த்த வேலைனு தெரியலையே..!
 

இந்நிலையில் இந்த படத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு, இந்திய அழகி பட்டம் பெற்ற அனுகீர்த்தி வாஸ், நடிகை ராதிகா ஆப்தே நடித்த கதாநாயகி வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை வெங்கடேஷ் என்பவர் இயக்க உள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பற்றிய மற்ற அதிகார பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.