தளபதி தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வேலை கொரோனோவின் தாக்கம் தணியாத பட்சத்தில் திரையரங்கங்கள்... திறக்கப்படுமா என்கிற சந்தேகம் உள்ளதால், திரைப்படம் வெளியாவதில் புதிய சிக்கல் உருவாகியுள்ளது.

இந்த படத்தின் முழு பணிகளும் நிறைவடைந்து விட்டதால், தளபதி அடுத்த படத்திற்காக ஜோராக தயாராகி வருகிறார். அதே நேரத்தில் அவருடைய ரசிகர்கள் மத்தியில், விஜய் அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே தளபதியின் 65 படத்தை இயக்கும் லிஸ்டில், சுதா கொங்கரா, வெற்றிமாறன், பேரரசு, உள்ளிட்ட இயக்குனர்கள் உள்ளனர். 

அதன்படி யாரோ ஒருவர், தளபதி அடுத்ததாக... இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார் என கொளுத்தி போட, இதை பார்த்து செம்ம ஷாக் ஆன அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்.... கண்டிப்பாக நான் இல்லை, இது யார் பார்த்த வேலைனு தெரியலையே என வடிவேலு ஸ்டைலில் பதிலளித்துள்ளார். இதில் இருந்து, அஜய் ஞானமுத்து தளபதியின் 65 ஆவது படத்தை இயக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

வெயிட்டிங் லிஸ்டில் உள்ள இயக்குனர்களில் யார் அடுத்ததாக விஜயின் படத்தை இயங்குவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.