இந்திய மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக, ஏப்ரல் 14 ஆம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் யாரும் அவசியமில்லாமல் வெளியே போக கூடாது என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அத்தியாவசிய தேவைகளுக்கு கூட முடிந்தவரை வெளியில் செல்வதை தவிர்க்க... வீட்டிற்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கி வைத்துக்கொள்வது நல்லது என மருத்துவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், வீட்டில் உள்ளவர்களுடன் ஒரு நாள் கூட தங்காமல், எந்நேரமும் நண்பர்களுடனும், வேலைகளுக்காகவும் சுற்றி கொண்டிருந்த பலர் வீட்டில் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது அவர்களுக்கு சற்று சலிப்பை ஏற்படுத்தினாலும் ஒரு வித புதிய அனுபவத்தையும் கொடுத்துள்ளது.

அந்த வகையில், 'மாஸ்டர்' போன்ற பல திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களை தொகுத்து வழங்கியுள்ள தொகுப்பாளர் விஜே. விஜய் மிகவும் உருக்கமாக ஒரு வீடியோவை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் கொரோனாவுக்கு நன்றி என பதிவிட்டு அவர் பேசுகையில்,  சென்னையில் உள்ள அணைத்து பகுதிகளிலும் என்னுடைய நண்பர்கள் உள்ளனர். 6 ஆம் வகுப்பு படிக்க துவங்கியதுமே, நண்பர்களுடன் நைட் ஸ்டே கூட செய்திருக்கிறேன். எந்நேரமும் வீட்டில் இல்லாமல் சுற்றி கொண்டே இருப்பேன். ஆனால் இப்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் போது தான் அம்மாவின் கஷ்டம் தெரிகிறது.

அம்மாவிடம் எப்படிம்மா வீட்டிலேயே இருக்க என கேட்டேன். உடனே அவர் எனக்கு ஒன்னும் வித்தியாசம் தெரியவில்லை, ஆனால் உன் அப்பாவும் இதையே தான் சொன்னார் என சொன்னாங்க. அப்போது தான் தெரிந்தது அவங்க எங்கேயுமே போனதில்லை என்று. இது தான் ரொம்ப வலிக்கிறது என்றும், இதனை புரிய வைத்ததற்காக கொரோனாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார் விஜய்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோ இதோ: