Divyadharshini Husband : தஞ்சாவூரில் பிறந்து இன்று சின்னத்திரையில் மிகச்சிறந்த தொகுப்பாளியாக பயணித்து வரும் நடிகை தான் திவ்யதர்ஷினி, இவருக்கு வயது 39.

கடந்த 1985ம் ஆண்டு பிறந்த திவ்யதர்ஷினி தனது ஐந்தாவது வயது முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதேபோல மிக மிக இளம் வயதில் தொகுப்பாளினியாக சின்னத்திரையில் களமிறங்கிய வெகு சிலரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கொஞ்சிக் கொஞ்சி பேசும் ஸ்டைல் பலருக்கும் பிடிக்கும். 

கடந்த 1999ம் ஆண்டு "உங்கள் தீர்ப்பு" என்கின்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக களமிறங்கிய திவ்யதர்ஷினி, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த துறையில் பயணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட திவ்யதர்ஷினி, அவர்களிடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். 

காதலரின் பிறந்தநாள்.. மடியில் உட்கார வைத்து வாழ்த்து சொன்ன ஷாலின் - "எரியுதடி மாலா" என்று சொல்லும் சிங்கிள்ஸ்!

கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் தனித்து வாழ்ந்து வரும் நிலையில், தற்போது ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் தனது நண்பர்களோடு உல்லாசமாக தனது நேரத்தை செலவிட்ட வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

View post on Instagram

அந்த நண்பர்கள் வேறு யாருமல்ல பிரபல தமிழ் திரையுலக நடிகர்கள் சாந்தனு, விக்ராந்த், பரத் மற்றும் கலையரசன் ஆகியவர்கள் தான். ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் பொதுவாகவே தனது நண்பர்களோடு இணைந்து இயற்கையை ரசிப்பதில் மிகவும் ஆர்வமுடையவர். இந்நிலையில் நடிகர் சந்தனுவோடு இணைந்து நண்பர்கள் பலரும் ட்ரக்கிங் சென்ற வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இறுதியாக இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான ஜோஸுவா இமைபோல் காக்க என்ற படத்தில் நடித்திருந்த நடிகை திவ்யதர்ஷினி, விக்ரமின் துருவநட்சத்திரம் என்ற படத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக அவர் இன்னும் சில படங்களிலும் நடிக்கவுள்ளார். 

"ஊர் கண்ணே பட்டுடும் போல" 4 முறை ஜோராக நடந்த அனிதா விஜயகுமார் மகளின் திருமண வரவேற்பு - லவ்லி கிளிக்ஸ்!