கல்கி 2898 AD.. அஸ்வத்தாமாவாக அமிதாப் பச்சன்.. கொடூர சாபம் பெற்ற அஸ்வத்தாமா இன்னும் உயிருடன் இருக்கிறாாரா?
கல்கி 2898 ஏடி படத்தில் அமிதாப் பச்சன் அஸ்வத்தாமாவாக நடிக்கிறார்.. யார் இந்த அஸ்வத்தாமா? வியாசர் எழுதிய மகாபாரதத்தில் அவரது பங்கு என்ன? அவர் இன்றும் உயிருடன் இருக்கிறாரா? விரிவாக பார்க்கலாம்
நாக் அஸ்வின் இயக்கி வரும் கல்கி 2898 ஏடி படத்தில் பிரபாஸ் லீட் ரோலில் நடித்து வருகிறார். சூப்பர் ஹீரோ பேண்டஸி படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் புராணக் கதையின் அம்சங்களும் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மகாபாரத காலத்திலிருந்து தொடங்கும் இந்த கதை எதிர்காலத்தில் பல நூற்றாண்டுகள் வரை தொடரும் என்றும் இயக்குனர் கூறியுள்ளார். இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார். பான் இந்தியா படமாக உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது.
இந்த நிலையில் கல்கி 2898 ஏடி படத்தின் புதிய வீடியோவை படக்குழு வெளியிட்டது. அமிதாப் பச்சனின் கேரக்டரை அறிமுகம் செய்யும் விதமாக இந்த வீடியோ வெளியானது. அதன்படி அமிதாப் பச்சன் அஸ்வத்தாமாவாக நடிக்கிறார். நேற்று முன் தினம் வெளியிடப்பட்ட வீடியோவில், அமிதாப் தனது முகம் முழுக்க பல கட்டுகளுடன் காணப்படுகிறார். அவரது நெற்றியில் ஒளிரும் மணி (மாணிக்கம்) காணப்படுகிறது. ஒரு குழந்தை அமிதாப்பிடம் நீங்கள் யார், கடவுளா, உங்களால் இறக்க முடியுமா என்று கேட்கிறது. அப்போது அமிதாப் “ நான் துவாபர் யுகத்திலிருந்து 10வது அவதாரத்திற்காக காத்திருக்கிறேன். நான் துரோணாச்சாரியாரின் மகன், அஸ்வத்தாமா" என்று கூறுகிறார். ஆனால் யார் இந்த அஸ்வத்தாமா? வியாசர் எழுதிய மகாபாரதத்தில் அவரது பங்கு என்ன? அவர் இன்றும் உயிருடன் இருக்கிறாரா? விரிவாக பார்க்கலாம்..
யார் இந்த அஸ்வத்தாமா?
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் குருவாக இருந்த துரோணாச்சாரியாரின் மகன் தான் அஸ்வத்தாமா. சிறு வயதிலேயே பல திறமைகளை கொண்டிருந்த அஸ்வத்தாமா, வில்லாற்றில் அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் நிகரான திறமை கொண்டிருந்தான். பிரம்மாஸ்திரம் அறிந்த 5 பேரில் அஸ்வத்தாமனும் ஒருவன். சிறு வயதிலேயே சுப போக வாழ்க்கை வேண்டும் என்று ஆசைப்பட்ட அஸ்வத்தாமா, துரியோதனன் பக்கம் சென்றுவிட்டான்.
துரியோதனன் கர்ணனுக்கு அடுத்த இடத்தில் அஸ்வத்தாமனை வைத்திருந்தான். ஒரு மாவீரன் போர்த்திறன் கொண்டவன், பிறக்கும் போதே சாகாவரம் பெற்றவன் என பல சிறப்பு அஸ்வத்தாமாவுக்கு உள்ளது. மகாபாரதத்தில் முக்கிய பங்கு அஸ்வத்தாமனுக்கு உண்டு. குருக்ஷேத்திரப் போரில் பாண்டவரை எதிர்த்துப் போரிட்டான், இந்த போரில் அஸ்வத்தாமன் கொன்றவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.
அஸ்வத்தாமா ஏன் பாண்டவர்களின் மகன்களைக் கொன்றான்?
குருக்ஷேத்திரப் போரின்போது, கிருஷ்ணரும் பாண்டவர்களும் அஸ்வத்தாமன் என்ற யானை இறந்துவிட்டது என்ற செய்தியைக் கூற அதை கேட்ட துரோணாச்சாரிய போரை நிறுத்தும் போது, அவர் கொல்லப்படுகிறார். போரில் தனது தந்தை கொல்லப்பட்டதை அறிந்ததும் அஸ்வத்தாமா படுகோபமடைந்தான். போரின் 10வது நாள் இரவில் பாண்டவர்களின் முகாமிற்குள் நுழைந்து திரௌபதியின் ஐந்து குழந்தைகளைக் கொன்றான்.
கிருஷ்ணர் கொடுத்த சாபம்:
இந்த செய்தியை அறிந்த அர்ஜுனும் கிருஷ்ணனும் அஸ்வத்தாமாவுடன் போரிட்டனர். அர்ஜுனனும் அஸ்வத்தாமாவும் உலகையே அழிக்கக்கூடிய சக்திவாய்ந்த பிரம்மாஸ்திர ஆயுதங்களை ஏவினார்கள். ஆனால் இந்த ஆயுதங்கள் மோதினால் உலகமே அழிந்துவிடும் என்று கூறி அப்போது தேவர்கள் தலையிட்டு ஆயுதங்களைத் திரும்பப் பெறச் சொன்னார்கள். இதனால் அர்ஜுன் பிரம்மாஸ்திரத்தை திரும்ப அழைத்துக் கொண்டான். ஆனால் அஸ்வத்தாமாவுக்கு அதை எப்படி செய்வது என்று தெரியவில்லை. ஆனால் பிரம்மாஸ்திரம் ஏதேனும் ஒரு இலக்கை அழித்தே தீரும். பாண்டவர்களின் மனைவியரின் கர்ப்பத்தில் இருந்த சிசுக்கள் அனைத்தும் அழியட்டும் என்று அந்த பிரம்மாஸ்திரத்திற்கு இலக்கு நிர்ணயித்தான்.
அபிமன்யுவின் மனைவி உத்தரையின் வயிற்றில் இருந்த சிசுவை அழிக்க நினைத்தான். எனினும் கிருஷ்ணர் இறந்த குழந்தையை மீண்டும் உயிர்ப்பித்தார். மேலும் அஸ்வத்தாமாவுக்கு கிருஷ்ணர் கொடூர சாபம் ஒன்றையும் அளித்தார். அதில் “ உடல் முழுவதும் ஆறாத காயங்கள் ஏற்பட்டு, உடலில் இருந்து ரத்தம் வந்து கொண்டே இருக்கும். மனிதர்கள் யாரும் உனக்கு உதவமாட்டார்கள், தன்னந்தனியாக காட்டில் மனிதனாகவும், மிருகமாகவும் அலைந்து திரியவேண்டும். எந்த தோழனும், பேசுவதற்கு ஆள் இல்லாமல் 3000 ஆண்டுகள் அலைந்து திரிய வேண்டும்” என்று கிருஷ்ணர் சாபமிட்டார்.
அஸ்வத்தாமா பிறக்கும் போதே நெற்றியில் ஒரு மணியுடன் பிறந்தார், இது பசி, தாகம் மற்றும் சோர்வு ஆகியவற்றிலிருந்து அவரைப் பாதுகாப்பதாக நம்பப்படுகிறது. அபிமன்யுவின் குழந்தையை அழிக்க முயற்சித்த போது, பகவான் கிருஷ்ணர் அவனது நெற்றியில் மணியை பறித்துவிட்டதாக கூறப்படுகிறது.
அஸ்வத்தாமா இன்னும் உயிருடன் இருக்கிறானா?
தான் செய்த பாவங்களுக்காக அஸ்வத்தாமா பூமியில் சுற்றித் திரிந்ததாகக் கூறப்படுகிறது. அஸ்வத்தாமா இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், அவர் இன்னும் பூமியில் தண்டனை அனுபவித்து வருகிறார் என்று பலர் நம்புகின்றனர்..
- Amitabh Bachchan
- Ashwatthama
- Ashwatthama Curse
- Ashwatthama Mani
- Ashwatthama alive
- Kalki 2898 AD
- ashwathama
- ashwathama alive
- ashwathama alive proof
- ashwathama is alive
- ashwathama mystery
- ashwathama of mahabharata still alive
- ashwathama real video
- ashwathama still alive
- ashwathama story
- aswathama
- aswathaman death
- aswathaman story
- introducing ashwatthama
- introducing ashwatthama - kalki 2898 ad
- is ashwathama still alive
- is ashwathhama still alive
- kalki 2898 ad teaser
- kya ashwathama aaj bhi jinda h
- mahabharat ashwathama