‘திரையுலகில் தாங்கள் நிகழ்த்தியுள்ள சாதனைகளுக்காக ஒரு மகனாக மட்டுமின்றி ஒரு ரசிகனாகவும் மிகவும் பெருமையாக உணர்கிறேன்’என்று தனது தந்தை அமிதாப்பின் 50 ஆண்டு சினிமா சாதனையை வாழ்த்தி பதிவிட்டுள்ளார் அபிஷேக் பச்சன்.

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை நீண்ட நெடுங்காலமாக அலங்கரித்துவரும் அமிதாப் பச்சனின் முதல் படமான ’சாட் ஹிந்துஸ்தானி’ 1969ம் ஆண்டு இதே நவம்பர் 7ம் தேதியன்று வெளியானது. முதல் படத்திலேயே முத்திரை பதித்த அமிதாப் அடுத்தடுத்து சூப்பர் டூப்பர் ஹிட்டுகள் கொடுத்து இந்தியின் பிரம்மாண்ட நட்சத்திரமானார். அடுத்து குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் தனது வயதுக்கு ஏற்ற வேடங்களில் நடிக்கத் துவங்கிய பிறகு அவர் மேல் ரசிகர்களுக்கு இருந்த மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது.

இதுவரை சுமார் 200 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் அமிதாப், இந்தியாவிலேயே அதிக முறை தேசிய விருது வாங்கிய நடிகராவார். ‘அக்னி பாத்’,’ப்ளாக்’,’பா’,’பிகு’ஆகிய படங்களுக்காக 4 முறை தேசிய விருது வாங்கியிருக்கிறார். [கமல் மூன்று முறை வாங்கியிருப்பவர்]. இந்நிலையில் தனது தந்தையின் 50 வது நினைவுநாள் குறித்து உருக்கமாகப் பதிவிட்ட அபிஷேக் பச்சன்,..."ஒரு மகனாக மட்டுமல்ல, ஒரு நடிகராகவும், ரசிகராகவும் ... உங்களை ரசிப்பதற்கும் பாராட்டுவதற்கும் உங்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும் எவ்வளவோ இருக்கின்றன. நாங்கள் அமிதாப் பச்சனின் காலத்தில் வாழ்ந்தோம் என்று பல தலைமுறைகளைச் சேர்ந்த சினிமா ரசிகர்கள் பெருமைப்பட்டுக்கொள்வார்கள். சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு வாழ்த்துகள்ப்பா...அடுத்த 50க்காக காத்திருக்கிறோம்...லவ் யூ...என்று பதிவிட்டிருக்கிறார்.

 அபிஷேக்கின் இப்பதிவு தற்போது தீயாய் வைரலாகிவருகிறது.