இந்தியாவின் பெரும் தொழிலதிபரான முகேஷ் அம்பானி வீட்டில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடத்தப்பட்டது. அப்போது விழாவில், பாலிவுட் நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்பட பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். 

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு அமைப்பினர் பல அடி உயரத்தில் சிலைகள் அமைத்து வழிபட்டனர். இதற்கு அரசு பல்வேறு விதிமுறைகளை விதித்தாலும், அதற்கு சம்மதம் தெரிவித்து இந்த விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல மாநிலங்களில் பல்வேறு வடிவங்களில் பிள்ளையார் சிலைகள் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டு நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

 

இந்நிலையில் மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப்பச்சன், அமீர்கான், சல்மான்கான், ஷாரூக்கான் உள்பட பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். 

இதேபோல் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலி மகன் அர்ஜுனுடன் கலந்து கொண்டார். விழாவில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.