Amalapaul said I survived because the fire inside me burned brighter than the fire around me

பாலிவுட் நடிகைகள் தங்களது பிகினி புகைப்படங்களைத் தனது வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வரும் வேளையில் தற்போது அமலா பாலும் கவர்ச்சியான புகைப்படத்தை தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டகிராமில் அவர் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டதற்கு அவரது ரசிகர்கள் அமலா பாலை திட்டித்தீர்த்தனர்.

நடிகை அமலாபால்,இயக்குநர் ஏ.எல்.விஜய்யுடனான விவாகரத்திற்குப் பின்னர் நடிப்பு, போட்டோஷுட் என படு பிஸியாக செயல்பட்டு வருகிறார். "விவாகரத்து ஆனதற்குப் பின்னர் அமலா பாலின் போக்கு மாறிவிட்டது. எதற்காக இப்படி அரைகுறை ஆடையுடன் வலம் வருகிறார் "என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.



அதற்கு அமலா பால், விவாகரத்து பெற்றுவிட்டால் ஒரு பெண் முழுமையாக மாறிவிட வேண்டும் என்று அவசியமில்லை என பதில் கொடுத்தார். இந்நிலையில், சமீபத்தில் இவர் நடத்திய போட்டோஷுட் ஒன்றின் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை அமலா பால் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதில் ‘என்னுள் இருக்கும் நெருப்பு தான் என்னை இன்னும் இங்கு பிழைக்க வைக்கின்றது’ என்பது போல் டிவிட் செய்துள்ளார்.

ஏற்கனவே ரசிகர்கள் கோபமாக இருக்கும் நிலையில் மீண்டும் தனது கவர்ச்சி புகைப்[படத்தை வெளியிட்டுள்ளார். சென்ற வாரம் முதன் முறையாக பாடகி சுசித்ரா வெளியிட்ட சுச்சிலிக்ஸ் பற்றி கருத்து கூறியுள்ளார். என்னுடைய ஆபாசப்படமும் வெளியிடப்படும் என கூறியதால் அதை பார்க்க நானும் காத்திருந்தேன் என கூறியுள்ளார்.