பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான “ராஜா ராணி” என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா.  அந்த சீரியலில் செண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஆல்யா அனைவரது மனைதையும் ஈசியாக கொள்ளையடித்தார். "குளிர் 100" படத்தில் ஹீரோவாக நடித்தவர் சஞ்சீவ். இவர் தான் "ராஜா, ராணி" தொடரில் ஹீரோவாக நடித்து வந்தார். சீரியலில் சின்னய்யா...சின்னய்யா... என்று கொஞ்சிய ஆல்யா ரசிகர்கள் மனதை மட்டுமல்ல சஞ்சீவையும் கவர்ந்தார்.

காதலில் கசிந்துருகிய ஆல்யா மானசா , சஞ்சீவ் ஜோடி வெற்றிகரமாக திருமணமும் செய்து கொண்டனர். இளசுகளை கவர்ந்த இந்த ஜோடி மீண்டும் வேறு ஏதாவது சீரியலில் ஒன்றாக இணைவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த சமயத்தில், ஆல்யா மானசா கர்ப்பமானார். இதனால் சஞ்சீவ் மட்டும் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். 

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஆல்யா மானசாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அழகிய பெண் குழந்தை பிறந்திருப்பதாக அவரது கணவர் சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். குட்டி ஆல்யாவின் முகத்தை பார்க்க வேண்டுமென ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இதனிடையே ஆல்யா மானசா - சஞ்சீவ் தம்பதி முதல் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர். 

View this post on Instagram

Kutty Papu 😍 I request everyone to be at home safe 🙏

A post shared by sanjeev (@sanjeev_karthick) on Mar 27, 2020 at 7:58am PDT

இதையும் படிங்க: அரைகுறை ஆடையில் ஆபாச நடனம்...வைரலாகும் “கோமாளி” நடிகையின் ரிலாக்சேஷன் வீடியோ...!

தனது குழந்தையின் முகத்தை காட்டாமல்,  குழந்தையின் பிஞ்சு கையை தன் கை மீது வைத்து கியூட்டான புகைப்படத்தை எடுத்து அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சஞ்சீவ். மேலும் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் சஞ்சீவ் தனது பதிவில் கூறியுள்ளார். குட்டி பப்புவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.