சுகுமார் - அல்லு அர்ஜுன் கூட்டணியில் வெளியான புஷ்பா திரைப்படம் சைமா விருது விழாவில் மொத்தம் 7 விருதுகளை வென்றுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்தாண்டு இறுதியில் வெளியாகி சக்கைப்போடு போட்ட திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார். அவரது இசையில் வெளியான பாடல்கள் அனைத்து இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தென்னிந்திய திரைப்படங்களுக்கான சைமா விருது வழங்கும் விழா 2 நாட்களாக பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடைபெற்ற விழாவில் தெலுங்கு மற்றும் கன்னட படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. இதில் சுகுமார் - அல்லு அர்ஜுன் கூட்டணியில் வெளியான புஷ்பா திரைப்படம் அதிகளவு விருதுகளை வென்றுள்ளது.

இதையும் படியுங்கள்... 50 வயதை தாண்டியும்... 25 வயது யங் ஹீரோயின் போல் வெல்வட் புடவையில் தகதகவென மின்னும் ராஜ மாதா ரம்யா கிருஷ்ணன்!

இப்படத்துக்கு மொத்தம் 7 விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த படத்துக்கான விருது, சிறந்த நடிகருக்கான விருதை அல்லு அர்ஜுனும், சிறந்த இயக்குனருக்கான விருதை சுகுமாரும், சிறந்த துணை நடிகருக்கான விருதை இப்படத்தில் அல்லு அர்ஜுனின் நண்பனாக நடித்த ஜெகதீஷ், பிரதாப் பண்டாரிக்கும் வழங்கப்பட்டது.

அதேபோல் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது தேவி ஸ்ரீ பிரசாத்துக்கும், சிறந்த பாடலாசிரியர் விருது, இப்படத்திற்காக ஸ்ரீவள்ளி பாடலை எழுதிய சந்திரபோஸுக்கு வழங்கப்பட்டது. இதுமட்டுமின்றி இப்படத்தின் தயாரிப்பு வடிவமைப்புக்காக ஜூரி விருது ராமகிருஷ்ணா மற்றும் மோனிகா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

View post on Instagram

இதையும் படியுங்கள்... சைமா விருது விழாவில் புஷ்பாவாக மாறிய ரன்வீர் சிங்... ஸ்ரீவள்ளி பாடலுக்கு நடனமாடி அதகளப்படுத்திய வீடியோ வைரல்