சைமா (SIIMA) விருது விழாவில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், புஷ்பா படத்தில் இடம்பெறும் ஸ்ரீவள்ளி பாடலுக்கு நடனமாடி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

தென்னிந்திய திரைப்படங்களுக்கு வழங்கப்படும் SIIMA விருதுகள் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2022-ம் ஆண்டுக்கான SIIMA விருதுகள் விழா பெங்களூருவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் தென்னிந்தியாவில் வெளியான படங்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த விழாவில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். உலகநாயகன் கமல்ஹாசன், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், கன்னட நடிகர் யாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான படங்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

                                                        

இதில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், தனது மனைவி தீபிகா படுகோனுக்காக கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசி அசத்தினார், அதுமட்டுமின்றி புஷ்பா படத்தில் இடம்பெற்று வைரல் ஹிட்டான ஸ்ரீவள்ளி பாடலுக்கும் மேடையில் நடனமாடி அசத்தினார். அதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... இவன் மீசைவச்ச குழந்தையப்பா! ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் குட்டிரசிகையுடன் ஜாலியாக விளையாடிய ரஜினி -வைரல் photos