புஷ்பா நடிகர் அல்லு அர்ஜுன் ஆசையாக செல்ஃபி எடுக்க பக்கத்தில் வந்த ரசிகரை, அலட்சியம் செய்து விட்டு கடந்து சென்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Allu Arjun: தெலுங்கு திரையுலகின் டாப் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான, "புஷ்பா 2" திரைப்படம், உலக அளவில் ரூ.1800 கோடி வசூல் சாதனை செய்தது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் ரிலீஸ் ஆன இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும் பகத் ஃபாசில், சுனில், அனசூயா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
'புஷ்பா' படத்தின் வெற்றியை தொடர்ந்து, அல்லு அர்ஜுன் யார் இயக்கத்தில் நடிப்பார் என்று... பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிப்பது உறுதியானது. அடிக்கடி இந்த படம் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில், சமீபத்தில் கலந்து கொண்ட விழா ஒன்றில், அல்லு அர்ஜுன் இது ஒரு பான் வேர்ல்ட் படமாக உருவாக உள்ளதாக தெரிவித்தார்.

அட்லீயின் எண்ணமும், என்னுடைய எண்ணமும் ஒரே மாதிரி இருந்தது. கண்டிப்பாக இது ஒரு தனித்துவமான படைப்பாக இருக்கும் என உறுதியளித்துள்ளார். இந்த படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள நிலையில், கூடிய விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
இந்நிலையில், அல்லு அர்ஜுனின் ஏர்போர்ட் வீடியோ ஒன்று வெளியாகி விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளது. அதில் அல்லு அர்ஜுன் செல்லும் போது ஒரு ரசிகர் ஆசையாக ஓடி வந்து அவருடன் செல்ஃபி எடுக்க முயன்ற நிலையில்... அல்லு அர்ஜுன் அவரை கண்டு கொள்ளாமல் கடந்து செல்கிறார். இதை பார்த்து தான் பல ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கொந்தளித்து வருகிறார்கள். அஜித், விக்ரம், நானி, NTR, போன்ற ஸ்டார் நடிகர்கள் தங்களின் ரசிகர்கள் செல்ஃபி எடுக்க வந்தால் பொறுமையாக அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் நிலையில்... அல்லு அர்ஜுன் இப்படி செய்தது ஓவர் ஆட்டிடியூட் காட்டுவது போல் இருப்பதாக கூறி வருகிறார்கள். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


