MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அதிக சம்பளம் வாங்கும் நடிகர் – 2 ஆண்டுகளுக்கு ஒரு படம் கூட இல்லை!

அதிக சம்பளம் வாங்கும் நடிகர் – 2 ஆண்டுகளுக்கு ஒரு படம் கூட இல்லை!

Allu Arjun Highest paid actors in India : இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான புஷ்பா 2 நடிகருக்கு அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஒரு படம் கூட ரிலீஸ் இல்லை என்பது அவரது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 30 2025, 08:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
அல்லு அர்ஜூன் சம்பளம்

அல்லு அர்ஜூன் சம்பளம்

Allu Arjun Highest paid actors in India : இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜூன். கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா 2 படத்திற்காக அல்லு அர்ஜூன் ரூ.300 கோடி வரையில் சம்பளம் வாங்கியிருக்கிறார். இது விஜய், அஜித், ரஜினிகாந்த் வாங்கும் சம்பளத்தை விட அதிகம். விஜய் ஜன நாயகன் படத்திற்கு ரூ.275 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
அஜித் சம்பளம்

அஜித் சம்பளம்

அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் குட் பேட் அக்லீ படத்திற்கு அஜித்திற்கு ரூ.110 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்திற்கு அவருக்கு எவ்வளவு சம்பளம் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

38
அல்லு அர்ஜூன் புஷ்பா 2 வசூல் சாதனை:

அல்லு அர்ஜூன் புஷ்பா 2 வசூல் சாதனை:

இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜூனுக்கு இனி அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு படம் கூட திரைக்கு வராமல் போகலாம். எனினும், அதிக வசூல் குவிக்கும் நடிகர்களில் முதலிடத்தில் இருக்கிறார். வேறு எந்த நடிகர்களையும் விட அதிகமாக வசூல் குவித்து வருகிறார். அவரது புஷ்பா 2 படம் உலகளவில் ரூ.1740 கோடி வரையில் வசூல் குவித்தது. இந்தியாவில் மட்டும் இந்தப் படம் ரூ.1469 கோடி வரையில் வசூல் குவித்தது. இதற்கு முன்னதாக ஷாருக்கான், ரஜினிகாந்த், பிரபாஸ் ஆகியோரது எந்தப் படமும் இத்தனை கோடி வசூல் குவிக்கவில்லை.

48
அதிக சம்பளம் வாங்கும் அல்லு அர்ஜூன்

அதிக சம்பளம் வாங்கும் அல்லு அர்ஜூன்

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அல்லு அர்ஜூன் திகழ்கிறார். ஃபோர்ப்ஸ் இந்தியா அறிக்கையின்படி அல்லு அர்ஜூன் அதிக சம்பளம் வாங்குகிறார். புஷ்பா 2 படத்திற்காக ரூ.300 கோடி சம்பளம் பெற்ற அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.460 கோடி ஆகும்.

58
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியல்:

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியல்:

அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் விஜய் 2ஆவது இடத்தில் இருக்கிறார். அவர் ஜன நாயகன் படத்திற்கு ரூ.275 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு அதிக வசூல் குவித்த படமாக GOAT உலகளவில் ரூ.450 கோடி வரையில் வசூல் குவித்தது. இதே போன்று 2023 ஆம் ஆண்டு வெளியான லியோ ரூ.621 கோடி வரையில் வசூல் குவித்து அதிக வசூல் குவித்த படமாக சாதனை படைத்திருந்தது.

68
ஷாருக்கானுக்கு எத்தனை கோடி சம்பளம் தெரியுமா?

ஷாருக்கானுக்கு எத்தனை கோடி சம்பளம் தெரியுமா?

இந்தப் பட்டியலில் அடுத்து இருப்பது ஷாருக்கான். அவரது நடிப்பில் வெளியான டங்கி படத்திற்கு ரூ.150 கோடி முதல் ரூ.250 கோடி வரையில் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் வேட்டையன், ஜெயிலர் போன்ற படங்களுக்கு ரூ.125 கோடி முதல் ரூ.270 கோடி வரையில் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

78
அல்லு அர்ஜூன் 22 அட்லீ 6

அல்லு அர்ஜூன் 22 அட்லீ 6

புஷ்பா 2 படத்திற்கு பிறகு அல்லு அர்ஜூன் தனது 22ஆவது படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் அட்லீ இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ.800 கோடி என்று சொல்லப்படுகிறது. ஹாலிவுட்டை மிஞ்சும் வகையில் இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிராபிக்ஸ் காட்சிகளுக்காக அல்லு அர்ஜூன் மற்றும் அட்லீ இருவரும் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்ற வீடியோ வெளியாகியிருந்தது.

88
அல்லு அர்ஜூனுக்கு ரூ.175 கோடி சம்பளம்

அல்லு அர்ஜூனுக்கு ரூ.175 கோடி சம்பளம்

இந்தப் படத்திற்கு அல்லு அர்ஜூனுக்கு ரூ.175 கோடி சம்பளம் என்றும், படத்தின் லாபத்தில் ரூ.15 சதவிகிதம் என்றும் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, அட்லீக்கு ரூ.100 கோடி சம்பளம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த ஆண்டின் நடுப்பகுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு வரும் 2026 அல்லது 2027ஆம் ஆண்டுகளில் இந்தப் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
அல்லு அர்ஜுன்
தளபதி விஜய்
அஜித் குமார்
 
26th T20 • WBBLT20
Live
HH-WHH-W
-
PS-WPS-W
(9.2 ov)64/3
HH-W chose to bowl.
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
(79.2 ov)236/5
INDIND
-
Day 1 - Session 3
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Live
PAKPAK
325
SLSL
(31.5 ov) 98 & 103/4
Day 3 - Session 1
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
28th T20 • WBBLT20
AS-WAS-W
Fri, 20 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Birthday: 'மறுபடி பிறந்தாலும்.. நீயே வேண்டும்' நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்கி போட்ட ரொமான்டிக் போஸ்ட்!
Recommended image2
Nayanthara : 42வது பிறந்தநாள் கொண்டாடும் நயன்தாராவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Recommended image3
Samantha : கணவருடன் சிறப்பு பூஜை... டெலிவரி டேட் பற்றி சமந்தா பதிவிட்ட கிரேஸி போஸ்ட் - எப்போ குழந்தை பிறக்கப்போகுது?
Related Stories
Recommended image1
இந்தியாவின் பிரபலமான டாப் 10 நடிகர்களின் பட்டியல் வெளியீடு – அஜித், விஜய்க்கு எந்த இடம் தெரியுமா?
Recommended image2
இன்ஸ்டாவில் அதிக பாலோவர்கள் கொண்ட டாப் 10 தென்னிந்திய நடிகர்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved