Alleged Wedding Card Of Mukesh Ambani Son Goes Viral And It Costs Rs 1 5 Lakh Only
சமீபத்தில்தான் நடிகை அனுஷ்கா ஷர்மா மற்றும் கிரிகெட் வீரர் விராட் கோலி திருமணம் மட்டுமின்றி அவருடைய திருமண பத்திரிக்கையும் மிகப் பெரிய அளவில் பரப்பரப்பாகப் பேசப்பட்டது.

அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், உலகப் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி அவருடைய இளைய மகன் திருமணத்திற்காக அச்சடித்துள்ள திருமண அழைபிதழ் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆம் ஆகாஷ் அம்பானியின் திருமண பத்திரிகை என்று சமூக வலைத்தளத்தில் விடியோ உடன் கூடிய ஒரு அழைப்பிதழ் வெளியாகியுள்ளது. இந்தப் பத்திரிக்கை முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளதாகவும். இதில் பாதாம், முந்திரி உள்ளிட்ட நட்ஸ் மற்றும் ஏலக்காய், மஞ்சள் குங்குமம் மற்றும் தங்க நகை ஆபரணமும் உள்ளே வைத்து பிரத்யேகமாக இந்தப் பத்திரிக்கை உருவாகி உள்ளதாகவும் இதன் மதிப்பு ரூ.1.5 லட்சம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது வெறும் வதந்தி என்று செய்திகள் வெளியாகின.
