பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜூன் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்தின் தற்கொலைக்கு பாலிவுட் திரையுலகின் வாரிசு அரசியலும், அதனால் ஏற்பட்ட மன அழுத்தமும் தான் காரணம் என்று கூறப்பட்டது. இதையடுத்து பாலிவுட் ரசிகர்களின் கோபம் வாரிசு நடிகர்கள், நடிகைகள் மீது திரும்பியது. 

அதிலும் குறிப்பாக நடிகை ஆலியா பட் மீதும் அவருடைய குடும்பத்தினர் மீதும் ரசிகர்கள் செம்ம கடுப்பில் உள்ளனர். நெபோடிசம் பிரச்சனையால் ஏற்கனவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 13 லட்சத்திற்கும் அதிகமானோரை இழந்துள்ள ஆலியா பட்,  தனது புது பட அறிவிப்பை கூட நெட்டிசன்களுக்கு பயந்து வேற லெவலுக்கு செய்திருந்தார். ஓடிடி-யில் வெளியாக உள்ள தனது சதக் 2 படம் குறித்து அறிவிக்கும் போது கூட கமெண்ட் செக்‌ஷனை ஆப் செய்துவிட்டே சோசியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார். 


தற்போது மகேஷ் பட் இயக்கத்தில் அவரது மகள்கள் அலியா பட், பூஜ பட் நடித்திருக்கும் 'சதக் 2'  படத்தின் டிரெய்லர் இன்று யூ-டியூப்பில் வெளியிடப்பட்டது. கொரோனா லாக்டவுன் நேரத்தில் தனது பட டிரெய்லர் லட்சக்கணக்கில் வியூஸ்களை அள்ளி சாதனை படைக்கும் என ஆசையாய் காத்திருந்த ஆலியா பட்டிற்கு சுஷாந்த ரசிகர்கள் செம்ம அதிர்ச்சி கொடுத்துள்ளனர். 

 

இதையும் படிங்க:  இடை தெரிய கவர்ச்சி உடை... தீயாய் பரவும் சீரியல் நடிகை ஷிவானியின் பெல்லி டான்ஸ் வீடியோ...!

படத்தின் டிரெய்லர் யூ-டியூப்பில் வெளியான 4 மணி நேரத்தில் 9 லட்சத்து 15 ஆயிரம் டிஸ் லைக்குகளை பெற்றுள்ளது. வெறும் 75 ஆயிரம் லைக்குகளை மட்டுமே பெற்றுள்ள சதக் 2 டிரெய்லரை இதுவரை 15 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.