அந்த வரிசையில் லக்ஷ்மி பாம் படம் டிஸ்னி + ஹாட் ஸ்டார் இணையதளத்தில் வெளியாக இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த படம் ‘காஞ்சனா’. 2011 ஆம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் சரத்குமார் திருநங்கை வேடத்தில் நடித்திருப்பார். அதேபோல் ராகவா லாரன்ஸும் திருநங்கை வேடத்தில் தோன்று கிளைமேக்ஸ் பாடலுக்கு டான்ஸ் ஆடி அசத்தினார். இப்படம் கன்னடம், சிங்களம் மற்றும் வங்காள மொழியிலும் மொழி மாற்று செய்யப்பட்டது. இந்தியில் டப் செய்யப்பட்ட இந்த படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ளார். தொடக்கத்தில் தயாரிப்பாளருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படத்தை விட்டு வெளியேறிய லாரன்ஸ், பின்னர் சமாதானமடைந்து இயக்கத் துவங்கினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழில் நடிகர் சரத்குமார் நடித்த 'திருநங்கை' கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடித்துள்ளார். ஹீரோயினாக கியாரா அத்வானி நடித்துள்ளார். தியேட்டர்கள் அனைத்தும் தற்போது மூடப்பட்டு இருப்பதால் பல படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றன. தமிழில் சூர்யாவின் சூரரைப் போற்று, விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் உள்ளிட்ட பல படங்கள் நேரடியாக இதில் வெளியாக உள்ளன. 

 அந்த வரிசையில் லக்ஷ்மி பாம் படம் டிஸ்னி + ஹாட் ஸ்டார் இணையதளத்தில் வெளியாக இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதாவது தீபாவளி விருந்தாக ஒருவாரம் முன்னதாக நவம்பர் 9ம் தேதி படம் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை அசத்தலான மோஷன் போஸ்டருடன் அக்‌ஷய் குமார் அறிவித்துள்ளார். அது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழில் வெற்றி பெற்ற ராகவா லாரன்ஸின் ஹாரர் கதை இந்தியில் ஒர்க் அவுட் ஆகிறதா என பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இதோ அந்த மோஷன் போஸ்டர்... 

Scroll to load tweet…