தூள் தூளாக நொறுக்கிய ரேஸ் கார்! விபத்தில் சிக்கிய அஜித்துக்கு என்ன ஆச்சு? கதறும் ரசிகர்கள்!
அஜித் குமார் கார் ரேஸூக்காக பயிற்சி மேற்கொண்ட போது எதிர்பாராத விதமாக கார் விபத்தில் சிக்கியுள்ளது. எனினும் அஜித் எந்த காயமும் இன்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
துபாயில் வரும் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் கார் ரேஸ் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த கார் ரேஸில் அஜித் குமாரும் கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக அவர் தனது காரை பார்த்து பார்த்து உருவாக்கியிருந்தார். இதற்காக கடந்த சில மாதங்களாக அஜித் குமார் துபாயில் இருந்தார். மேலும், கார் ரேஸ் பயிற்சியும் மேற்கொண்டு வந்தார். இதற்கிடையில் தனது விடாமுயற்சி படத்தின் சில காட்சிகளையும், டப்பிங் பணிகளையும் முடிப்பதற்கு சென்னை வந்த அவர் விடாமுயற்சி பட காட்சிகளையும், டப்பிங் பணிகளையும் முடித்த கையோடு சில தினங்களுக்கு முன்பு துபாய் புறப்பட்டு சென்றார்.
அவரை வழியனுப்பி வைக்க அவரது குடும்பத்தினர் சென்னை விமான நிலையம் வந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலானது. இந்த நிலையில் தான் இன்று அஜித் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இதில் எதிர்பாராத விதமாக அவரது காரானது கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன் பக்கம் முழுவதும் சேதமடைந்துள்ளது. இதையடுத்து அங்கிருந்த மருத்துவ குழு அவரை பத்திரமாக மீட்டுள்ளது. எனினும், இந்த கார் விபத்தில் அஜித்துக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
பிக்பாஸ் வீட்டில் நடக்க உள்ள மிட் வீக் எவிக்ஷன்! வெளியே செல்ல உள்ளது யார்?
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பைக் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் கூறியது இப்போது நினைவுக்கு வருகிறது. அதிவேகமாக கார் ரேஸ் செல்வது எல்லாம் ஆபத்து என்று தானே என்று நான் கேட்டேன். ஆனால், அதற்கு அஜித், கார் மற்றும் பைக் ரேஸ் என்று எதுவாக இருந்தாலும் நான் முறையாக பயிற்சி எடுத்து தான் ரேஸ் மேற்கொள்வேன். அப்படியிருக்கும் போது, 90 சதவிகிதம் விபத்து தவிர்க்கப்படும். மீதமுள்ள 10 சதவிகிதம் இயற்கைக்கு மாறானது. அது இயற்கையாக நடக்க கூடியது. நம் கையில் எதுவும் இல்லை.
நான் யாருக்கும் எந்த கெடுதலும் செய்தது கிடையாது. ஆதலால் எனக்கு எதுவும் நடக்காது. கடவுள் இருக்காரு. அவர் பார்த்துக் கொள்வார். அவர் என்னை காப்பாற்றுவார். எனக்காக நீங்கள் வேண்டிக் கொள்ளுங்கள். உங்களைப் போன்றவர்கள் இருக்கும் போது எனக்கு எந்த கவலையும் இல்லை என்று அஜித் கூறியதாக சுப்ரீம் மாஸ்டர் கூறியுள்ளார். இப்போது கூட கார் ரேஸ் விபத்திலிருந்து அஜித் எந்த காயமும் இல்லாமல் தப்பித்துள்ளார். இதற்கு அஜித் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பு, கடவுளின் ஆசியும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. அதோடு, இனிமேல் கார் ரேஸ் எல்லாம் வேண்டாம் என்று ரசிகர்கள் அஜித்துக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். என்னினும் அஜித்தின் ரசிகர்கள் கவலையுடன் அவரின் நலன் குறித்து விசாரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.