பிக்பாஸ் வீட்டில் நடக்க உள்ள மிட் வீக் எவிக்ஷன்! வெளியே செல்ல உள்ளது யார்?
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் மிட் வீக் எவிக்சன் நடைபெற உள்ள தகவல் உறுதியாகி உள்ள நிலையில், இதனை உள்ளே வந்த 8 போட்டியாளர்கள் தான் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி நாட்களை நெருங்கி வரும் நிலையில், பிக்பாஸ் வித்தியாசமான பல டாஸ்க்களை போட்டியாளர்களுக்கு கொடுத்து வருகிறார். அந்த வகையில் நேற்றைய தினம், பிக்பாஸ் நாக் அவுட் சுற்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய எட்டு போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வந்துள்ளனர்.
அதாவது சாச்சனா, தர்ஷாகுப்தா ,அர்னவ், சிவகுமார், ரவீந்தர் சந்திரசேகர், ரியா, வர்ஷினி வெங்கட் ஆகியோர் தான் மீண்டும் உள்ளே வந்துள்ளனர். இவர்கள் உள்ளே உள்ள 8 போட்டியாளர்களுடன் மோத உள்ள நிலையில், ஒருவேளை வைல்டு கார்டு போட்டியாளர்கள் வெற்றிபெற்றால் இருவர் ரீபிலேஸ் செய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை கேட்டதும்... உள்ளே இருக்கும் ஹவுஸ் மேட்ஸ் முடிந்தவரை இறங்கி விளையாட வேண்டும் என மன உறுதியோடு உள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, இந்த வாரம் மிட் வீக் எவிக்ஷன் மூலம்... ஒரு போட்டியாளர் வெளியேற உள்ளதாக வர்ஷினி வெங்கட் கூறும் புரோமோ தான் வெளியாகி உள்ளது. இந்த எவிக்ஷனை நடத்த போவது உள்ளே வந்த 8 போட்டியாளர்கள் தான் என்பதையும் அறிவித்துள்ளார். இதுகுறித்த புரோமோ தற்போது வெளியாகி போட்டியாளர்களுக்கு மட்டும் அல்ல, ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இந்த ப்ரோமோவில் உள்ளே வந்து பேசும் சிவகுமார்' ஒரு அட்டையில் எழுதி உள்ள வாசகங்களை படிக்கிறார். அப்போது "கிளாப்ஸ் வர வர பிரண்ட்ஸை மாற்றிக் கொண்டே இருக்கீங்களே... இப்போ உங்களுடைய லேட்டஸ்ட் ஃபிரண்ட் யாரு?' என ஜாக்குலினை பார்த்து கேட்கிறார். இதை தொடர்ந்து "லவ் கன்டென்ட் மட்டும்தான் என்டர்டெயின்மென்ட்" என படித்துவிட்டு விஷாலுக்கு என்டர்டைன்மென்ட் போல? என கேட்கிறார். இதை கேட்டதும் விஷாலின் முகம் அப்படியே மாறுகிறது. இதைத் தொடர்ந்து அறம் அறம்னு அறுக்குறியே தவிர, நீ செய்கிறதுல எதிலுமே அறம் இல்லை என முத்துக்குமாருக்கு பல்பு கொடுக்க, இன்னுமா உன்ன இந்த ஊர் நம்பிக்கிட்டு இருக்கு என படிக்கிறார்.
போதை பொருள் வழக்கு; மன்சூர் அலிகான் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்!
இதைத் தொடர்ந்து பேசும் வர்ஷினி, இந்த வாரம் மிட் வீக் எவிக்ஷன் இருக்கு. இதை நடத்த போவது புதிதாக வந்துள்ள இந்த 8 போட்டியாளர்கள் தான் என கூறுகிறார். இதை கேட்டதுமே பிக் பாஸ் வீட்டில் உள்ள மத்த 8 போட்டியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்கிறார்கள். எனினும், என்ன நடக்க போகுது, யார் வெளியேறுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.