ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசரை வெளியிட்டு உள்ளனர்.

அஜித் குமாரின் 63வது படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இப்படத்தின் மாஸான டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அஜித்குமாரின் குட் பேட் அக்லி திரைப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தெலுங்கில் அல்லு அர்ஜுனின் சென்சேஷனல் ஹிட் படமான புஷ்பா 2வை தயாரித்து வெற்றிகண்ட அந்நிறுவனம், குட் பேட் அக்லி மூலம் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்துள்ளது. இப்படத்தில் அஜித்துடன் பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், சிம்ரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

அதுமட்டுமின்றி குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் மனைவி ஷாலினியும் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு முதலில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருந்த நிலையில், அவர் திடீரென விலகியதால் அவருக்கு பதில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 10ந் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இதையும் படியுங்கள்... 25 ஆண்டுகளுக்கு பின் அஜித் ஜோடியாக சினிமாவில் கம்பேக் கொடுக்கிறாரா ஷாலினி?

தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக குட் பேட் அக்லி படத்திற்கு ப்ரீமியர் ஷோ திரையிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இப்படம் ஏப்ரல் 10ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாக ஏப்ரல் 9ந் தேதியே குட் பேட் அக்லி திரைப்படத்தின் ப்ரீமியர் ஷோவை பிரத்யேகமாக திரையிட திட்டமிட்டுள்ளார்களாம். தமிழ் சினிமாவுக்கு இது ஒரு டிரெண்ட் செட்டராகவும் மாற வாய்ப்புள்ளது.

குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க அஜித்துக்கு ரூ.160 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம். அவர் கெரியரிலேயே அதிக சம்பளம் வாங்கியது இந்த படத்திற்கு தான். அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விடாமுயற்சி திரைப்படம் சொதப்பியதால் அப்செட்டில் இருக்கும் ரசிகர்களை உற்சாகப்படுத்த குட் பேட் அக்லி திரைப்படத்தின் அப்டேட்டுகளை அடுத்தடுத்து வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

அந்த வகையில் தற்போது குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அஜித் கேங்ஸ்டராக நடித்துள்ள இப்படத்தின் செம மாஸான டீசரை பார்த்து இம்பிரஸ் ஆன ரசிகர்கள் படம் கன்ஃபார்ம் ஹிட்டு தான் என சிலாகித்து கமெண்ட் செய்து வருகின்றனர். விடாமுயற்சி தோல்வியால் அப்செட்டில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு பூஸ்ட் ஏற்றும் விதமாக குட் பேட் அக்லி டீசர் அமைந்துள்ளது.

Good Bad Ugly Tamil Teaser | Ajith Kumar | Trisha | Adhik Ravichandran | Mythri Movie Makers

இதையும் படியுங்கள்... உடற்பயிற்சியே செய்யாமல் நடிகர் அஜித் சட்டென 25 கிலோ உடல் எடையை குறைத்தது எப்படி?