Asianet News TamilAsianet News Tamil

தல ஸ்பீடு அள்ளுது... புதிதாக வாங்கிய ஃபெராரி காரை டாப் கியரில் ஓட்டிய அஜித் - வைரலாகும் வீடியோ

நடிகர் அஜித்குமார் அண்மையில் சிகப்பு நிற ஃபெராரி கார் ஒன்றை வாங்கி இருந்தார். அதை அவர் ஓட்டியபோது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகிறது.

Ajithkumar Drive his Ferrari Car viral video gan
Author
First Published Aug 8, 2024, 1:22 PM IST | Last Updated Aug 8, 2024, 1:22 PM IST

நடிகர் அஜித்குமார் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று விடாமுயற்சி. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் ஆரவ், அர்ஜுன், ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இதுதவிர நடிகர் அஜித் கைவசம் உள்ள மற்றுமொரு திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு வில்லனாக நட்டி நட்ராஜ் நடிக்கிறார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பும் தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... Ajith : ஷாலினியோடு ரொமாண்டிக் ரைடு செல்ல அஜித் வாங்கிய காஸ்ட்லியான ஃபெராரி கார்... அதன் விலை இத்தனை கோடியா?

Ajithkumar Drive his Ferrari Car viral video gan

ஷூட்டிங் பிசியாக இருந்தாலும் ஓய்வு கிடைக்கும் நேரங்களில் பைக் ரைடிங் செல்வது அல்லது கார் ரேஸிங் செய்வது என பம்பரம் போல் சுழன்று வருகிறார் அஜித். ஏற்கனவே பல்வேறு வகையான கார்களை வாங்கி குவித்து வைத்திருக்கும் அஜித், அண்மையில் ஃபெராரி கார் ஒன்றை சொந்தமாக வாங்கி இருந்தார். ரெட் கலரில் இருக்கும் அந்த ஃபெராரி காரின் விலை ரூ.9 கோடியாம்.

இந்த நிலையில், தன்னுடைய ஃபெராரி காரை நடிகர் அஜித் ஓட்டிச்சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் அஜித் டாப் கியரில் செம்ம ஸ்பீடாக ஃபெராரி காரை ஓட்டிச் செல்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் உங்களைப் போலவே காரும் செம்ம ஸ்டைலிஷாக இருக்கிறது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்...   இன்ஸ்டாவில் மில்லியனில் ஃபாலோவர்ஸ் இருந்தாலும்.. மனைவியை மட்டுமே ஃபாலோ பண்ணும் 2 டாப் ஹீரோஸ்! யார் தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios