- Home
- Gallery
- Ajith : ஷாலினியோடு ரொமாண்டிக் ரைடு செல்ல அஜித் வாங்கிய காஸ்ட்லியான ஃபெராரி கார்... அதன் விலை இத்தனை கோடியா?
Ajith : ஷாலினியோடு ரொமாண்டிக் ரைடு செல்ல அஜித் வாங்கிய காஸ்ட்லியான ஃபெராரி கார்... அதன் விலை இத்தனை கோடியா?
விடாமுயற்சி படத்தின் நாயகன் அஜித்குமார், தற்போது இரண்டு பேர் மட்டும் அமர்ந்து செல்லக்கூடிய ஃபெராரி காரை வாங்கி இருக்கிறார்.

VidaaMuyarchi Ajith
தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். அவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை அஜர்பைஜான் நாட்டில் படமாக்கி உள்ளனர். தற்போது ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
Good Bad Ugly Hero Ajith
விடாமுயற்சி தவிர நடிகர் அஜித் கைவசம் மற்றொரு தமிழ் படமும் உள்ளது. அதுதான் குட் பேட் அக்லி. அப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மட்டும் நிறைவடைந்து உள்ளது. விடாமுயற்சி படத்தில் அஜித் நடித்து முடித்த பின்னர் குட் பேட் அக்லி படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் தொடங்க உள்ளது.
இதையும் படியுங்கள்... சூரியின் கொட்டுக்காளி பட ரிலீசுக்கு நாள் குறிச்சாச்சு! சிவகார்த்திகேயன் வெளியிட்ட தகவல்!
Ajith new car
இப்படி ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிகர் அஜித் பிசியாக நடித்து வந்தாலும், தனக்கு ரெஸ்ட் கிடைக்கும் நேரங்களில் பைக் ரைடிங் செல்வது, கார் ரேஸ் செல்வது என தனக்கு பிடித்தவற்றை செய்துவருகிறார். பைக், கார்கள் மீது அதிக கிரேஷ் உள்ளதால் தன் வீட்டில் புதுப்புது கார் மற்றும் பைக்குகளை வாங்கி அடுக்கி வைத்திருக்கிறார் அஜித்குமார். அவரின் லிஸ்ட்டில் லேட்டஸ்டாக ஒரு சொகுசு கார் ஒன்று இணைந்திருக்கிறது.
Ajith's Ferrari sf90 stradale car
அதுதான் Ferrari sf90 stradale கார். இந்தக்காரை தான் தற்போது சொந்தமாக வாங்கி இருக்கிறார் அஜித். இந்த காரின் விலை ரூ.9 கோடியாம். இதில் 2 பேர் மட்டுமே பயணிக்க முடியும். தன்னுடைய காதல் மனைவி ஷாலினி உடன் ரொமாண்டிக் ரைடு செல்வதற்காக இந்த காரை நடிகர் அஜித் வாங்கி இருக்க வாய்ப்புள்ளது. அந்த Ferrari sf90 stradale காருடன் நடிகர் அஜித் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகிறது.
இதையும் படியுங்கள்... தளபதியின் GOAT படத்தில் இணைந்த "வாரிசு நடிகை?" விரைவில் வெளியாகும் சூப்பர் அப்டேட்!