அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் ஏகே62 (AK62) படம் திரையரங்கில் வெளியான பிறகு நெட்பிளிக்ஸில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் 3ஆவது வெற்றிப்படமாக வெளிவந்த படம் துணிவு. கடந்த 11 ஆம் தேதி திரைக்கு வந்த துணிவு படம் 5 நாட்களில் தமிழகம் முழுவதும் ரூ.65 கோடி வசூல் அள்ளியதாக கூறப்படுகிறது. முழுக்க முழுக்க வங்கி கொள்ளையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கலவையான விமர்சனம் பெற்ற துணிவு படம் அதிகப்படியான திரையரங்குகளில் வெளியாகி உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் அதிகமாகவே வசூல் அள்ளியதாக கூறப்படுகிறது.
பொங்கல் வின்னர் அஜித்தின் துணிவா - விஜய்யின் வாரிசா? ரெட் ஜெயிண்ட் மூவிஸ் போட்ட பரபரப்பு ட்வீட்!
துணிவு' திரைப்படத்தின் தமிழகத்தின் ஒட்டு மொத்த வெளியீட்டு உரிமையையும், ' வாரிசு' திரைப்படத்தை தமிழகத்தில் சில பகுதிகளிலும் வெளியிட்ட ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம், பொங்கல் வின்னர் யார் என்பது குறித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளது. இதில் அஜித்தின் 'துணிவு' மற்றும் விஜய்யின் 'வாரிசு' ஆகிய இரண்டு படங்களுமே வெற்றிப் படங்கள் தான் என நடுதரமாக தன்னுடைய பதிவை போட்டுள்ளதால் இரு தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் இந்த தகவல் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருவதோடு, லைக்குகளை குவித்து வருகிறது.
இந்த நிலையில், இந்தப் படத்தைத் தொடர்ந்து அஜித்குமார் ஏகே62 (AK62) என்ற படத்தில் நடிக்கிறார். இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை லைகா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது ஏற்கனவே வெளியான தகவல். தற்போது புதிய தகவல் என்னவென்றால், ஏகே62 படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிக தொகைக்கு விலைக்கு வாங்கியுள்ளது. அதுமட்டுமின்றி இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக இருக்கிறது. அத்தனை மொழிகளிலும் உருவாகும் ஏகே62 படத்தை திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது.
'RRR' படம் பார்த்த இரண்டு முறை ஜேம்ஸ் கேமரூன்..! ராஜமௌலி என்ன சொன்னார் தெரியுமா? வைரல் பதிவு!
இது குறித்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூவர்மாக கூறியிருப்பதாவது: ஜில்லா ஜில்லா தான் எங்களால் முடியாமல் போய்விட்டது. ஆனால், ஏகே62 (AK62) தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸில் திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகு வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக #Ak62 என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
