வேலூரில் அஜித் ரசிகர் மன்ற, அலுவலகத்திற்குள் புகுந்து 'துணிவு' படத்தின் டிக்கெட்டுகளை திருடர்கள் களவாடி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் நாளை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது. எனவே இந்த படத்தின் முன்பதிவு டிக்கெட் ஒருபுறம் திரையரங்குகளில் விறுவிறுப்பாக விற்பனையாகி வருகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதனால் தான் நீங்கள் தளபதி..! 'பதான்' ட்ரைலரை வெளியிட்ட விஜய்க்கு நன்றி கூறி ஷாருக்கான் பதிவு..!

இந்நிலையில் அஜித் ரசிகர் மன்றம் சார்பில், ரசிகர்களுக்காக முன்பதிவு செய்து வாங்கப்பட்ட டிக்கெட்டுகள் ரசிகர் மன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த டிக்கெட்டுகள் அனைத்தையும் திருடர்கள் திருடி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'துணிவு' திரைப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் டிக்கெட்களையும் யாரோ சிலர் 'துணிவு' பாணியிலேயே ரசிகர் மன்ற அலுவலகத்திற்குள் புகுந்து, களவாடி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் வேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித்துக்கு ஜோடியாக இந்த படத்தில் மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், பிரேம், சிபி சக்கரவர்த்தி, பவானி, அமீர் போன்ற பலர் நடித்துள்ளனர். போனி கபூர் மூன்றாவது முறையாக இப்படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே நாளில் விஜய்யின் வாரிசு படமும் வெளியாக உள்ளது.

ஒத்த செருப்புக்காக ஆஸ்கரில் 20 லட்சத்தை இழந்தேன்.! ஆனால் இரவின் நிழல்? - ஆஸ்கர் அரசியலை பேசிய பார்த்திபன்!