Ajith-Vijaycontrovercy : அஜித் -விஜய் ரசிகர்களின் மோதல் காலம்காலமாக நடந்து வருகிற விஷயம் அனைவருக்கும் தெரியும்.. ஆனால இவர்களது ஒரு சில படங்கள் மட்டுமே ஒரே நேரத்தில் மோதியுள்ளன..

அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், 'வலிமை' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ளது. இன்னும் படம் வெளியாக சில தினங்களே உள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விதத்தில், அவ்வப்போது படக்குழு லேட்டஸ்ட் அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிலீஸ் தள்ளிப்போனது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதேபோல், தற்போது தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடித்து வந்த 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் தான் முடித்தார். இந்த படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் இப்படம் வரும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திரையரங்கில் வெளியாகும் என கூறப்படுகிறது.

அஜித் - விஜய் ரசிகர்கள் தங்கள் மனம் கர்ந்த ஹீரோக்களுக்காக சண்டை போட்டுக்கொண்ட பல தருணங்களை நாம் அறிந்திருப்போம். வார்த்தைகள் முற்றி கைகலப்பில் முடிந்த பல அஜித் - விஜய் ரசிகர் சண்டைகளை செய்திகளில் பார்த்திருக்கிறோம். ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் எத்தனையோ போஸ்டுகளில் பெரிய ஹீரோ யார்.. அஜித்தா..? விஜய்யா..? என்ற முட்டல் மோதல்கள் நடந்துள்ளன.

ஆனால் உண்மையில் இருவரது ஒரு சில படங்கள் மட்டுமே ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளன. அவ்வாறு அஜித்தின் தீனா மற்றும் விஜயின் ப்ரண்ட்ஸ் படமும் ஒரே நேரத்தில் மோதியுள்ளன. அப்போது தீனா படத்திற்கு கூட்டம் அள்ளியுள்ளது. ஆனால் ப்ரண்ட்ஸ் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு ஸ்டார்டிங்கில் இல்லையாம்.. இதனால் விஜய் ப்ரண்ட்ஸ் பட தயாரிப்பாளரிடம் தனது படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்காதது குறித்து புலம்பியுள்ளாராம்..பின்னர் தயாரிப்பளார் கூறியபடியே இரண்டு ,மூன்றாம் வாரங்களில் இருந்து விஜய் படத்திற்கும் கூட்டம் வர ஆரம்பித்ததாம்..