“நேர்கொண்ட பார்வை” படத்தை தொடர்ந்து இயக்குநர் ஹெச்.வினோத், இயக்கத்தில் தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியுடன் மீண்டும் தல அஜித் இணைந்துள்ள திரைப்படம் “வலிமை”. இந்த படத்தில் 'என்னை அறிந்தால்' படத்திற்கு பின் மீண்டும் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் அஜித்குமார். கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு செம்ம எங் லுக்கிற்கு மாறியுள்ளார். 

ஐதராபாத், சென்னை என இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் மாறி, மாறி நடைபெற்று வந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது ஒட்டு மொத்தமாக படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த படம் குறித்து ஏற்கனவே வெளியான தகவலில், இப்படத்தில் அஜித்துக்கு 3 வில்லன்கள் என்றும், அதில் ஒருவராக தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் கார்த்திகேயா நடிப்பதாகவும் கூறப்பட்டது. முதன் முறையாக இந்தி நடிகை ஹுயூமா குரேஷி  அஜித்துடன் ஜோடி நடித்துள்ளார். அஜித்திற்கே டப் கொடுக்கும் அளவிற்கு பைக் சீனில் செம்ம மாஸாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. 

 

இதையும் படிங்க: கொழு கொழுன்னு இருந்த வித்யுலேகா ராமனா இது?... 30 கிலோ வரை எடையை அசால்டாக குறைத்து ஆளே மாறிட்டாரே....!

கொரோனா பிரச்சனையால் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தள்ளிப்போயுள்ள சூழ்நிலையில் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் படத்தை 2021ம் ஆண்டு பொங்கல் அன்று ரிலீஸ் செய்யலாம் என படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம்.இந்நிலையில் இந்த படம் குறித்து நீண்ட இடைவெளிக்கு பின், வெளியாகியுள்ள லேட்டஸ்ட் ஹாட் அப்டேட் அஜித் ரசிகர்களை சந்தோஷத்தில் துள்ளி குதிக்க வைத்துள்ளது. 

 

இதையும் படிங்க: தள்ளாத வயதில் தலைக்கேறிய காமம்... 67 வயது ஆபாச பட நடிகருக்கு 90 ஆண்டுகள் ஜெயில்...!

தற்போது கொரோனா பிரச்சனையால் பல படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றன. ஏன்? தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை கூட பல கோடிக்கு வாங்க அமேசான் பிரைம் நிறுவனம் தயாராக காத்துகிடந்தது. ஆனால் தளபதியே, “ நான் படம் பண்றதே என் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்காக தான், அதனால் படம் கண்டிப்பாக தியேட்டரில் தான் ரிலீஸ்” ஆகும் என கறாராக சொல்லிவிட்டார். இதையடுத்து சமீபத்தில் பேட்டி ஒன்றிற்கு பதிலளித்த போனிகபூரிடம் உங்களுடைய படங்களை ஓடிடி தளத்தில் வெளியிடும் திட்டமிருக்கிறதா? என கேள்வி எழுப்பப்பட்டது. 

 

இதையும் படிங்க:  செம்ம கடுப்பில் சிரஞ்சீவி... சக நடிகர்களுடன் சேர்ந்து அடம்பிடிக்கும் மகனால் அப்செட்டில் தந்தை...!

அதற்கு பதிலளித்த போனி கபூர், “சில படங்கள் தியேட்டர் அனுபவங்களுக்காக மட்டுமே தயாரிக்கப்படுகிறது. எனது புதிய படங்களை தியேட்டரில் வெளியிட மட்டுமே நான் விரும்புகிறேன்” என அதிரடியாக பதிலளித்துள்ளார். போனிகபூரின் இந்த பதிலால் தல ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். தற்போது தல அஜித்துடன் “வலிமை”, அஜய் தேவ்கனுடன் “மைதான்”, தெலுங்கில் பவன் கல்யாண் உடன் “வக்கீல் சாப்” ஆகிய 3 படங்களை தயாரித்து வருகிறார்.