“நேர்கொண்ட பார்வை” படத்தை தொடர்ந்து இயக்குநர் ஹெச்.வினோத், இயக்கத்தில் தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியுடன் மீண்டும் தல அஜித் இணைந்துள்ள திரைப்படம் “வலிமை”. இந்த படத்தில் 'என்னை அறிந்தால்' படத்திற்கு பின் மீண்டும் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் அஜித்குமார்.

மேலும் செய்திகள்: சின்னத்திரை படப்பிடிப்பு... அதிரடி உத்தரவு போட்ட முதலமைச்சர்!
 

கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு செம்ம எங் லுக்கிற்கு மாறியுள்ளார். ஐதராபாத், சென்னை என இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் மாறி, மாறி நடைபெற்று வந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது ஒட்டு மொத்தமாக படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த படம் குறித்து ஏற்கனவே வெளியான தகவலில், இப்படத்தில் அஜித்துக்கு 3 வில்லன்கள் என்றும், அதில் ஒருவராக தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் கார்த்திகேயா நடிப்பதாகவும் கூறப்பட்டது. முதன் முறையாக இந்தி நடிகை ஹியூமா குரேஷி  அஜித்துடன் ஜோடி நடித்துள்ளார். அஜித்திற்கே டப் கொடுக்கும் அளவிற்கு பைக் சீனில் செம்ம மாஸாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்: சட்டை பட்டனை கழட்டி விட்டு... சென்சார் செய்யும் அளவிற்கு எல்லை மீறிய கவர்ச்சி காட்டிய ரகுல் ப்ரீத் சிங்!
 

கொரோனா பிரச்சனையால் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தள்ளிப்போயுள்ள சூழ்நிலையில் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் படத்தை 2021ம் ஆண்டு பொங்கல் அன்று ரிலீஸ் செய்யலாம் என படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம்.

இந்நிலையில் இந்த படம் குறித்து நீண்ட இடைவெளிக்கு பின், வெளியாகியுள்ள லேட்டஸ்ட் ஹாட் அப்டேட் அஜித் ரசிகர்களை சந்தோஷத்தில் துள்ளி குதிக்க வைத்துள்ளது. "வலிமை படம் குறித்து, கடைசியாக தேசிய அளவிலான பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி கொடுத்த தயாரிப்பாளர் போனி கபூர். இந்த படம் மிகப்பெரிய ஆக்ஷன் படமாக உருவாகி வருவதாகவும். 50 சதவீத படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது தான் அஜித் ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்: கைக்குட்டையில் மேலாடை... ஷாலு ஷம்மு - மீரா மிதுனை மிஞ்சிய இளம் நடிகை! சோசியல் மீடியாவை சூடாக்கிய ஹாட் போட்டோஸ்
 

இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். சமீபத்தில் கூட, இந்த படத்தில் 5 விதமான ரசனைகளை பிரதிபலிக்கும் விதமாக பாடல்களை யுவன் ஷங்கர் ராஜா வடிவமைத்துள்ளதாகவும். அதில் 2 பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.