படம் ரிலீஸ் ஆகி நாட்கள் ஆகிவிட்டது ஆனாலும் இன்னமும் சூடு குறையவே இல்லை! என்கிறார்கள் விஸ்வாசம் படத்துக்கான மக்கள் வரவேற்பை. பேட்ட-யும் தரை இறங்கி செம்ம தாக்குதல் தான் நடத்தி இருக்கிறது. ஆனாலும் அஜித்தை விட ரஜினி பின் தங்கி இருப்பது தெள்ளத்தெளிவு! என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள். 

ஆனால் அதேவேளையில் ‘விஸ்வாசம் வசூல் பேட்ட வசூலை விட அதிகம்! என்று பொய்யாக கிளப்புகிறார்கள்.’ என்று ஒரு தரப்பு கூச்சல் போட்டுக் கொண்டிருந்தது. இந்நிலையில், இரு படங்களின் முதல் நாள் தமிழக தியேட்டர் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் இரு படங்களுமும் ரிலீஸான முதல் நாள் வசூல் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அதன்படி பேட்ட படம் பத்து கோடியே நாற்பது லட்சமும், விஸ்வாசம் படம் பதினாறு கோடியே அறுபத்தியோரு லட்சமும் வசூல் செய்துள்ளதாம். இந்த வித்தியாச தொகை ரஜினியின் கவனத்துக்குப் போக மனிதர் சற்று நொந்துவிட்டாராம்.

இந்நிலையில், அடுத்த தலைமுறை நடிகர் அஜித்குமாரிடம் ரஜினிகாந்த் போட்டியிட்டு தோற்றுவிட்டதாக வெளிவரும் தகவல்கள்  சூப்பர் வட்டாரத்தை ஏகத்துக்கும் கோபப்படுத்தியுள்ளன. இந்நிலையில், இந்த வசூல் பின் தங்கலானது தயாரிப்பு வட்டாரத்தையும் எரிச்சலாக்கியதாம். 

அதாவது ‘சார்தான் (ரஜினி) இந்த மோதலுக்கு விருப்பப்பட்டார். இல்லேன்னா சில வாரங்கள் கழிச்சுதானே வெளியாகுற பிளான் நமக்கு இருந்துச்சு?” என்று சுருக்கென்று கூறிவிட்டாரம் தயாரிப்பு தரப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவர். இதுவும் ரஜினியின் கவனத்துக்கு போய், கடுப்பேற்றி இருக்கிறது. 

இந்நிலையில், ’அஜித்தோடு அடம் பிடித்து மோதிய ரஜினிகாந்துக்கு ஆறு கோடியே நாற்பத்து ஓரு லட்சம் ரூபாய் நஷ்டம்!’ என்று செமத்தியாக நக்கலடித்திருக்கிறது ரஜினிக்கு ஆகாத தரப்பு.