AK61 Update : அஜித் 61 படத்தில் பில்லா, மங்கத்தா, படம் போல வில்லன் கெட்டப்பிலும் ,இரட்டை வேடத்திலும்  அஜித் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித் திடீரென மும்பை சென்று தயாரிப்பாளர் போனி கபூரை நேரில் சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.   

தல அஜித்தின் வலிமை படம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அதிகம் எதிர்பார்ப்புகளை கொடுத்த படமாகும். இந்த படத்தின் அப்டேட்டை வெளியிட வேண்டும் என அஜித் ரசிகர்கள் பெரிய போராட்டத்தையே செய்து விட்டனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வலிமை படபிடிப்பு முழுதும் சில மாதங்களுக்கு முன் நிறைவு செய்யப்பட்டது. இதனால் விஸ்வாசம் - பேட்ட போன்று ரஜினி படமும், அஜித் படமும் தீபாவளிக்கு மோதும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த படம் மட்டுமே ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த ஆண்டுபொங்கலுக்கு வலிமை படம் ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார். ஆனால் திடீரென பரவ துவங்கிய கொரோனா தோற்றால் மீண்டும் வலிமை ரிலீஸ் தள்ளிப்போனது..

இதற்கிடையே நேர்கொண்ட பார்வை" வெற்றியை தொடர்ந்து போனி கபூர்,வினோத்,அஜித் கூட்டணியில் வலிமை உருவாகியது. இதை தொடர்ந்து மூன்றாவது முறையாக AK 61 படமும் இதே கூட்டணியில் அமையவுள்ளது. ஆனால் முதல் மூன்று படங்களுக்கு இசையமைத்த யுவனுக்கு பதிலாக AK 61-ல் அனிரூத் இசையமைக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

வலிமை படத்தின் ரிலீஸ் தேதியே இன்னும் உறுதி செய்யப்படாத போது அஜித்தின் அடுத்த படமான AK 61 அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அஜித் 61 படத்தில் பில்லா, மங்கத்தா, படம் போல வில்லன் கெட்டப்பிலும் ,இரட்டை வேடத்திலும் அஜித் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித் திடீரென மும்பை சென்று தயாரிப்பாளர் போனி கபூரை நேரில் சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

View post on Instagram