அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படத்தின் 2ஆவது சிங்கிள் டிராக் காசேதான் கடவுளடா என்ற பாடல் எப்போது வெளியாகிறது என்பது குறித்து அறிவிப்பு வந்துள்ளது.

நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் குமார், இயக்குநர் ஹெச் வினோத் கூட்டணியில் 3ஆவதாக உருவாகியுள்ள படம் துணிவு. இந்தப் படத்தையும் போனி கபூர் தான் தயாரித்துள்ளார். துணிவு படத்தில் மஞ்சு வாரியர் முக்கிய ரோலில் நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி, வீரா, மமதி சாரி, சிபி சந்திரன், மகாநதி சங்கர், பிரேம்குமார் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

சின்னத்திரை நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன் அதிரடி கைது - பின்னணி என்ன?

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு படம் வெளியாக உள்ள நிலையில், தமிழக திரையரங்கு உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும், வெளிநாட்டு உரிமத்தை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே துணிவு படத்தின் முதல் சிங்கிள் டிராக் சில்லா சில்லா பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதோடு, இன்னமும் அந்தப் பாடல் தான் யூடியூஒ டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. 

Money Money Money !!
Its all about the Money 💸#KasethanKadavulada out tomorrow/out today at 2 pm

Stay Tuned#ThunivuSecondSinglepic.twitter.com/H0qPmTVj3K

Scroll to load tweet…

இந்த நிலையில், சில்லா சில்லா பாடலைத் தொடர்ந்து துணிவு படத்தின் 2ஆவது சிங்கிள் டிராக்கான காசேதான் கடவுளடா என்ற பாடல் எப்போது வெளியாகும் என்பது குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, இன்று பிற்பகல் 2 மணிக்கு காசேதான் கடவுளடா 2ஆவது சிங்கிள் டிராக் வெளியாக உள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இன்று விடுமுறை என்பதால், காசேதான் கடவுளடா என்ற பாடலை பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை சரளாவுடன் மோதும் ஜி.பி.முத்து: சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இதற்கு முன்னதாக அஜித் நடித்த மங்காத்தா படத்தில் அஜித் பேசும் வசனம் Money Money Money... இதை மையப்படுத்தி கூட இந்தப் பாடல் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது கடந்த 1972 ஆம் ஆண்டு காசேதான் கடவுளடா என்ற படம் வெளியாகிருந்தது. இதில் முத்துராமன், தேங்காய் சீனிவாசன், மனோரமா ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் ஜம்புலிங்கமே ஜடாதடா என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. இதே போன்று சிவா, யோகி பாபு, பிரியா ஆனந்த் ஆகியோர் நடிப்பில் காசேதான் கடவுளடா என்ற படம் வெளியானது. இந்தப் படத்தில் ஜம்புலிங்கமே ஜடாதடா என்ற பாடல் இடம் பெற்றிருந்தது. 

எது எப்படியோ அஜித் ரசிகர்களுக்கு துணிவு படத்தின் 2ஆவது சிங்கிள் டிராக் காசேதான் கடவுளடா கொண்டாட்டமாக தான் இருக்கும்.