நடிகர் அஜித் குமார் தலையில் முடியின்றி மொட்டைத் தலையோடு வலம் வருவதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.
Ajith Bald Look : தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். அவர் நடிப்பில் இந்த ஆண்டு இரண்டு படங்கள் ரிலீஸ் ஆனது. அதில் கடந்த பிப்ரவரி மாதம் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து திரைக்கு வந்த விடாமுயற்சி திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அப்படத்தின் தோல்வியில் இருந்து இரண்டே மாதத்தில் மீண்டும் வந்த அஜித், குட் பேட் அக்லி என்கிற தரமான கம்பேக் படத்தை கொடுத்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய அப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது.
அஜித்தின் அடுத்த படம்
குட் பேட் அக்லி திரைப்படத்தின் அதிரி புதிரியான வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் அடுத்ததாக தயாராக உள்ள திரைப்படம் ஏகே 64. இப்படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க உள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளாராம். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க உள்ளதாகவும், விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
ஏகே 64 திரைப்படத்தை தொடங்கும் முன்னர் நடிகர் அஜித் தற்போது கார் ரேஸில் பிசியாக இருக்கிறார். இந்த ஆண்டு அவர் இதுவரை மூன்று கார் ரேஸில் கலந்துகொண்டிருக்கிறார். அந்த மூன்று பந்தயத்திலுமே அஜித்தின் அணி வெற்றி வாகை சூடியது. இந்த நிலையில் ஐரோப்பாவில் நடைபெற உள்ள GT4 கார் பந்தயத்தின் 3வது சுற்றில் பங்கேற்பதற்காக தற்போது தயாராகி வருகிறார் அஜித். இதற்காக பெல்ஜியம் சென்றுள்ள அஜித் அங்குள்ள ஸ்பா பிராங்கோசாம்ப்ஸ் சர்க்யூட்டில் பயிற்சி மேற்கொண்டார்.
மொட்டையடித்த அஜித்
அவர் பயிற்சிக்கு வந்தபோது எடுத்த வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் நடிகர் அஜித்தின் லுக்கை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப் போய் உள்ளனர். அதில் மொட்டைத்தலையுடன் காட்சியளிக்கிறார் அஜித். இதைப்பார்த்த ரசிகர்கள், ஒருவேளை இது ஏகே 64 படத்தின் லுக்காக இருக்குமா என கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகர் அஜித் கடைசியாக வேதாளம் படத்தில் மொட்டைத் தலையுடன் நடித்திருந்தார். அதன்பின் மீண்டும் மொட்டையடித்துள்ளதால் அவர் ஆளே அடையாளம் தெரியவில்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
