Ajith Involved in a Car Accident in Valencia : ஸ்பெயின் நாட்டில் வாலன்சியாவில் நடைபெற்று வரும் கார் ரேஸில் 6ஆவது சுற்றின் போது அஜித் குமார் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பிய வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் வைரலாகிறது.
Ajith Involved in a Car Accident in Valencia : கார் ரேஸ் பிரியரான அஜித் குமார் தற்போது ஸ்பெயின் நாட்டில் வாலன்சியாவில் நடைபெற்று வரும் கார் ரேஸ் போட்டியில் பங்கேற்றார். இதில், அவர் 5ஆவது சுற்று வரை சிறப்பாக செயல்பட்டு 14ஆவது இடம் பிடித்தார். ஆனால், 6ஆவது சுற்றின் போது அஜித் கார் மீது மற்ற கார்கள் மோதியதில் 2 முறை விபத்து நிகழ்ந்தது. இதில், முதல் விபத்து ஏற்பட்ட போது அஜித் அதிலிருந்து மீண்டு உடனே டிராக்கில் செயல்பட்டார். ஆனால், 2ஆவது முறை நிகழ்ந்த கார் விபத்தின் போது அவரது பல்டி அடிக்கவே அஜித் 2 முறை கீழே விழுந்தார். இந்த விபத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். எனினும், இது தொடர்பான வீடியோ காட்சிகள் ரசிகர்களை பதற வைக்கிறது.
விடாமுயற்சி அவுட் ஆனா என்ன? கெத்தாக வந்த குட் பேட் அக்லி அப்டேட்
இது குறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து அதில் அஜித் மீது எந்த தவறும் இல்லை என்பது போன்று கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: ரேஸ் நடந்து கொண்டிருந்த ஸ்பெயின் நாட்டின் வாலன்சியவில் 5ஆவது சுற்றில் சிறப்பாக செயல்பட்டு 14ஆவது இடம் பிடித்தார். ஆனால், 6ஆவது சுற்றில் 2 முறை விபத்துக்குள்ளானார். அஜித் தவறு ஏதும் செய்யவில்லை என்பது வீடியோவை பார்க்கும் போது தெரிகிறது.
முதல் முறையாக விபத்து ஏற்பட்ட போதிலும், அவர் மீண்டும் குழிக்குள் சென்று நன்றாகச் செயல்பட்டார். 2ஆவது முறை மீண்டும் விபத்து ஏற்பட்டபோது, அவர் 2 முறை கீழே விழுந்தார். அவரது விடாமுயற்சி வலிமையானது, மேலும் அவர் ரேஸை தொடர மீண்டும் காயமின்றி வெளியே வருகிறார். அக்கறை மற்றும் வாழ்த்துக்களுக்கான அனைத்து பிரார்த்தனைகளுக்கும் நன்றி. ஏகே நலம் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து அஜித் 3ஆவது முறையாக விபத்தில் சிக்கி மீண்டு வந்துள்ளார். இதற்கு முன்னதாக ஜனவரி மாதம் துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் தொடரில் பங்கேற்றார். இதற்காக கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக துபாயில் தங்கி பயிற்சியும் மேற்கொண்டார். கார் ரேஸ்க்காக தன்னுடைய் காரையும் வடிவமைத்தார். துபாய் கார் ரேஸ் தொடங்குவதற்கு முன்னதாக அஜித் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது பிரேக் ஃபெயிலியர் காரணமாக கார் விபத்துக்குள்ளானது. எதிர்பாராத விதமாக இந்த கார் விபத்தில் அஜித்திற்கு எதுவும் நடக்கவில்லை. இதைத் தொடர்ந்து இந்த கார் ரேஸிலிருந்து விலகுவதாக அறிவித்து பின்னர் மீண்டும் கார் ரேஸில் பங்கேற்றார்.
இதில் 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்தார். துபாய் கார் ரேஸ் சீரிஸைத் தொடர்ந்து போர்ச்சுகல் நாட்டில் நடைபெற்ற கார் ரேஸில் பங்கேற்றார். இதில் எதிர்பாராத விதமாக கார் விபத்தில் சிக்கியுள்ளார். பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவரது கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அஜித்திற்கு எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால், அவரது கார் மட்டுமே பயங்கரமாக சேதமடைந்துள்ளது. இந்த கார் விபத்திற்கு பிறகு பேட்டியளித்த அஜித் கூறியிருப்பதாவது: நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். சிறிய விபத்தில் சிக்கியிருந்தாலும் எங்களுக்கு எதுவும் ஆகவில்லை. கார் ரேஸில் வெற்றி பெறுவோம். எங்களுக்கு ஆதரவு அளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
திருமணத்தை மீறிய உறவால் கணவனை தேடும் பெண் – ஜென்டில்வுமன் படத்தின் டிரைலர் வெளியீடு!
இதைத் தொடர்ந்து தற்போது 3ஆவது முறையாக அவரது கார் விபத்தில் சிக்கியது. எனினும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதற்கு முன்னதாக அஜித் கார் ரேஸ் தொடரில் பங்கேற்பதற்கு முன்னதாக அவர் பேசிய கூற்று இப்போது நினைவிற்கு வருகிறது. நான் யாருக்கும் எந்த துரோகமும் செய்யவில்லை. மேலும், கடவுளின் ஆசியும், உங்களது அன்பும் இருக்கும் வரையில் எனக்கு எதுவும் நடக்காது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாத தொடக்கத்தில் அஜித் நடித்த விடாமுயற்சி படம் வெளியானது. ஆனால், கலவையான விமர்சனங்களை எதிர்கொண்ட விடாமுயற்சி உலகளவில் ரூ.135 கோடி வரையில் வசூல் குவித்திருக்கிறது. படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.350 கோடி. அப்படியிருக்கும் போது விடாமுயற்சி தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்திருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 10ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான குட் பேட் அக்லி படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜூன் தாஸ், யோகி பாபு ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரம் தொடர்பான வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
