தல அஜித் தற்போது 'வலிமை' படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக அஜித் நடித்து வருவதாக கூறப்பட்டாலும், இதுவரை அவர் போலீஸ் கெட்டப்பில் இருக்கும் ஒரு புகைப்படம் கூட வெளியாகவில்லை. அதே போல் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியே சென்று விட கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்கள் படக்குழுவினர்.

 ரசிகர்கள் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் விதத்தில், இந்தப் படத்தில் அஜித்தின் ரேஸிங் காட்சிகள், மற்றும் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாகவே இருக்கும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருந்தார். 

மேலும் செய்திகள்: கர்ப்பமாக இருக்கும் ஆலியாவிற்கு  அதிர்ச்சி கொடுத்த விஜய் டிவி! குலுங்கி குலுங்கி அழுத  சம்பவம்!

இந்நிலையில் 'தல' தன்னுடைய காதில் தேசியக்கொடி வரையப்பட்ட ஹெட்செட் ஒன்றை போட்டுக்கொண்டு, இலக்கை துப்பாக்கியால் டார்கெட் செய்யும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

ஏற்கனவே அஜித்துக்கு துப்பாக்கி சுடுதலில், அதிக ஆர்வம் உள்ளது அனைவரும் அறிந்ததுதான். மேலும் கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில், இவர் கலந்துகொண்டு விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே தற்போது வெளியாகியுள்ள புகைப்படம் துப்பாக்கிச் சுடுதலின் போது எடுக்கப்பட்டதா? அல்லது திரைப்படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்டதா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆனால் அஜித்தின் ரசிகர்கள் தலயின் இந்த மாஸ் புகைப்படத்தை வைரலாக்குவதில் மட்டுமே குறியாய் செயல்பட்டு வருகிறார்கள்.

அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்கி வருகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். அஜித் ஜோடியாக 'காலா' படத்தில் தலைவரின் காதலியாக நடித்த நடிகை ஹீமோ குரோஷி நாயகியாக நடித்து வருகிறார். மேலும் யோகி பாபு, கார்த்திகேயா, உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.