விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' சீரியல் மூலம் பிரபலமானவர் சின்ன கண் அழகி ஆலியா மானசா.  இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஜய் டிவி நடத்திய விருது விழாவில் இவர்கள் அணைத்து பிரபலங்கள் மத்தியிலும், மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் நடந்தது. எனினும் திருமணம் மிகவும் எளிமையாக நடந்து முடிந்தது.

இந்நிலையில் ஆலியா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். எனவே சீரியலில் நடிக்கா விட்டாலும், அவரை வளர்த்து விட்ட விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'டான்சிங் சூப்பர் ஸ்டார்' என்கிற நிகழ்ச்சியில், நடுவராக இருக்கிறார்.

அதே போல் அவருடைய கணவர் சஞ்சீவ் சீரியல்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இவர் நடித்து வரும் 'காற்றின் மொழி' சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

டாஸிங் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி பைனல் நடைபெற்றுள்ளது. அப்போது ஆலியாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில், விஜய் டிவி ஆலியாவிற்கு வளைய காப்பு செய்து வைத்துள்ளது மட்டும் இன்றி, இதனை தான் இவரிடம் பேசாமல் இருந்த பெற்றோரை இவரின் வளையக்காப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்து, மகிழ்வித்துள்ளது.

இதனை சற்றும் எதிர்பார்க்காத, ஆலியா மேடையிலேயே தன்னுடைய கணவரை கட்டி அணைத்து அழுதார். மேலும் தற்போது வரை தன்னுடைய அம்மா - அப்பா இங்கு வந்திருக்கிறார்கள் என்பதை நம்பமுடியவில்லை என கூறி தன்னுடைய உணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ள வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோ இதோ...