வீரம், விவேகம் படத்தின் பிரமாண்ட வெற்றியைத்தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் சிவாவுடன் கைகோர்த்துள்ள படம் தான் விவேகம்.  அஜித்துடன்,காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் என ஸ்டாலிஷ் ஸ்டார்ஸ் பங்களிப்பில் ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தின் போஸ்டர், டீசர், மற்றும் ட்ரைலர் வெளியானதிலிருந்து அதனை சமூக வலைதளங்களில் மிகவும் ட்ரெண்டாக்கி வருகின்றனர் நம்ம தல அஜித் ரசிகர்கள்.

இந்நிலையில்  உலகமெங்கும் நாளை மிரட்டலாக வெளியாகும் இத்திரைப்படம் தமிழகம் முழுவதிலும் கிட்ட தட்ட 95 % திரையரங்கங்களில் வெளியாகவுள்ளது. விவேகம் படத்தை வித்தியாசமாக வரவேற்கும் நோக்கத்தில் அஜித் ரசிகர்கள் புது முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அஜித்தின் 57 திரைப்படத்தை குறிப்பிடும் வகையில் 57 கிலோ எடையில் அஜித்தின் உருவத்தை இட்லியாக சுட்டுள்ளனர். வடசென்னை அருகே உள்ள பாரத் திரையரங்கம் மும்பு பிரமாண்டமான செட் அமைத்து இன்று மாலை அஜித் உருவ இட்லியை வைத்து கொண்டாட உள்ளனர்.

பொதுவாக ரசிகர்கள் பேனர், போஸ்டர், பாலபிஷேகம், மற்றும் சிலைவைப்பதை தாண்டி ஒரு நடிகருக்கு இட்லியில் உருவம் பொரித்து கொண்டாடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.