அஜித் முன் அவரின் சூப்பர் ஹிட் மெலடி பாடல் பாடி அசத்திய ரசிகர்;வீடியோ!
அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் இடம் பெற்ற 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' என்ற பாடலை ரசிகர் ஒருவர் பாட, அஜித் அந்த பாடல் முழுவதையும் கேட்டு ரசித்த வீடியோ வைரலாகி வருகிறது.
அஜித் நடிப்பில் 2000ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டே'. இந்தப் படத்தை ராஜிவ் மேனன் இயக்க, மம்மூட்டி, தபு, ஐஸ்வர்யா ராய், அப்பாஸ், மணிவண்ணன், ரகுவரன், ஷாமிலி ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் அஜித் ஒரு பட இயக்குநராக நடித்திருந்தார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இந்தப் படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றிபடமாக அமைந்தது.
இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல் தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இந்தப் பாடலை அஜித்தின் முன்பே அவரின் வெளிநாட்டு ரசிகர் ஒருவர் பாடி காட்டிஅசத்தியுள்ளார். அந்த ரசிகருக்கு மரியாதை கொடுக்கும் விதமாக அஜித் அந்த பாடலை முழுவதும் பாடிய பிறகு அவரை பாராட்டிய அஜித் உங்களது பெயர் என்ன என்று கேட்க, அவரும் தனது பெயர் அஜித் என்று கூறியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஊர்வசி படைத்த சாதனை; இதுவரை எந்த நடிகைக்கும் கிடைத்திடாத பெருமை!
துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் தொடரில் அஜித் 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்தார். அதன் பிறகு போர்ச்சுக்கல்லில் நடைபெற்ற கார் ரேஸில் கலந்து கொண்டார். அடுத்தடுத்து அஜித் இன்னும் சில மாதங்களுக்கு ரேஸில் கவனம் செலுத்தினாலும், இவர் நடித்துள்ள படங்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெளியாக உள்ளது. அதன்படி அஜித் மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவான விடாமுயற்சி படம் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்த நிலையில், தனிப்பட்ட காரணம் காரணமாக பொங்கல் ரிலீசிருந்து பின் வாங்கியது. இந்தப் படம் ஹாலிவுட்டில் வெளியான பிரேக் டவுன் படத்தின் தமிழ் ரீமேக். பிரேக் டவுன் படக்குழுவினருடன் ஏற்பட்ட பணப்பிரச்சனை காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இப்போது படக்குழுவினருடன் சமரச பேச்சுவார்த்தை எட்டிய நிலையில் படத்தை பிப்ரவரி 6ஆம் தேதி வெளியிடுகின்றனர்.
3 லட்சம் வாடகை பாக்கி; வீட்டை லாட்ஜாக மாற்றி விட்டதாக கஞ்சா கருப்பு மீது போலீசில் புகார்!
இந்தப் படத்தில் அஜித் உடன் இணைந்து அர்ஜூன், ஆரவ், ரெஜினா கஸாண்ட்ரா ஆகியோர் பலரும் நடித்துள்ளனர். கணவன் மனைவிக்கிடையிலான விஷயங்களை விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர். விடாமுயற்சியின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 46 நிமிடம். இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் பெற்றுள்ள நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி ரைட்ஸ் பெற்றுள்ளது. மியூசிக் உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. இதை தொடர்ந்து ஏப்ரல் மாதம் அஜித்தின் குட் பேட் அக்லீ படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.