முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு ஒட்டு மொத்த தமிழகத்தயே சோகத்தில் ஆழ்த்தியது, இவரது இழப்பு திரையுலகினருக்கும் பேரிழப்பு என்று சொல்லலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதனால் இவருக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர். இதற்காக அஜித் பல்கேரியாவில் அவருடைய 57 பட சூட்டிங்கிலிருந்து உடனடியாக கிளம்பினார்.

16 மணி நேர பயணத்துக்கு பிறகு வந்த போது முதல்வரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது. இதனால் அவரின் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு நேற்று மறைந்த சோ அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தி விட்டு மீண்டும் பல்கேரியாவுக்கு திரும்பியுள்ளார்.

தன்னுடைய படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட செல்லாத இவர் முதல்வர் மேல் உள்ள மரியாதையின் காரணமாக இவ்வளவு தூரம் நேரத்தை செலவிட்டு வந்து சென்றதை ரசிகர்களும், திரையுலகத்தினரும் பாராட்டுகின்றனர்.

மேலும் சிலர் நடிகர் கமல் வெளிநாடுகளில் இருந்தால் கூட ட்விட்டர் மூலம் கூறி இருக்கலாம் அல்லது அஜித் போலவாவது வந்து சென்றிருக்கலாம், ஆனால் ஏன் இப்படி செய்தீர்கள் கமல் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இன்னும் சிலர் அஜித்தை பார்த்து மரியாதையை எப்படி தருவது என்று கற்றுக்கொள்ளுங்கள் என சூசகமாக ட்விட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.