Ajith 61 getup video : தனது அடுத்த பட கெட்டப்பில் அஜித் மாஸாகா நடந்து வரும் வீடியோவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

தல அஜித்தின் வலிமை படம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அதிகம் எதிர்பார்ப்புகளை கொடுத்த படமாகும். இந்த படத்தின் அப்டேட்டை வெளியிட வேண்டும் என அஜித் ரசிகர்கள் பெரிய போராட்டத்தையே செய்து விட்டனர். பிரதமர் முதல் விளையாட்டு வீரர் வரை அனைவரிடமும் வலிமை அப்டேட் குறித்து கோரிக்கை விடுத்து விட்டனர் அஜித் ரசிகர்கள். இது குறித்து ரசிகர்களை கண்டித்திருந்தார் தல அஜித்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வலிமை படபிடிப்பு முழுதும் சில மாதங்களுக்கு முன் நிறைவு செய்யப்பட்டது. இதனால் விஸ்வாசம் - பேட்ட போன்று ரஜினி படமும், அஜித் படமும் தீபாவளிக்கு மோதும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த படம் மட்டுமே ரிலீஸ் செய்யப்பட்டது. பின்னர் 2022-ம் ஆண்டு பொங்கலுக்கு வலிமை படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்தார். 

நேர்கொண்ட பார்வை" வெற்றியை தொடர்ந்து போனி கபூர்,வினோத்,அஜித் குடடணியில் வலிமை உருவாக்கி வருகிறது. இதை தொடர்ந்து முன்றாவது முறையாக AK 61 வது படமும் இதே கூட்டணியில் அமையவுள்ளதாக சொல்லப்பப்படுகிறது. ஆனால் முஹல் மூன்று படங்களுக்கு இசையமைத்த யுவனுக்கு பதிலாக AK 61-ல் அனிரூத் இசையமைக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

வலிமை படத்தின் ரிலீஸ் தேதியே இன்னும் உறுதி செய்யப்படாத போது அஜித்தின் அடுத்த படமான AK 61 அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்கிடையே அஜித் 61 படத்தில் பில்லா, மங்கத்தா, படம் போல வில்லன் கெட்டப்பில் அஜித் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. வலிமை படபிடிப்பு முடிந்துள்ள நிலையில் அஜித் தனது அடுத்தவதாரத்தை எடுத்துள்ளார். சமீபத்தில் வெளியான அஜித்தின் வீடியோவில் தாடி வைத்துள்ள கெட்டப்பில் அஜித் நடந்து வருகிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.