இந்தி தேசிய மொழி இல்லை எனில் உங்கள் மொழி படங்களை ஏன் இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள் என பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் போட்ட ட்வீட்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் யாஷ் நடிபில் வெளியான கேஜிஎஃப்: அத்தியாயம் 2 உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்தது. கன்னட திரைப்படமான இது பான் இந்திய படமாக வெளியாகி அனைத்து மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. படம் வெளியான முதல் வாரத்தில் மட்டும் ரூ.720.31 கோடி வசூல் செய்து நாடு முழுவதும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இரண்டாவது வார இறுதியில் ரூ.800 கோடியைத் தாண்டியது. அதன் மொத்த வசூல் ரூ.880 கோடி இருந்தது. 

அதேபோல முன்னதாக வெளியான ஆர் ஆர் ஆர் படமும் ராஜமௌலியின் முந்தைய படமான பாகுபலி வசூல் சாதனையை முறியடித்து 1100 கோடிக்கு மேல் கல்லாக்கட்டி வாய்பிளக்க வைத்தது. இந்த படங்கள் மட்டுமல்ல பிரபலங்களின் சமீபத்திய படங்கள் பெரும்பாலும் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பன்மொழி படங்களாகவே இந்தியா முழுதும் திரையிடப்படுகிறது. இந்த போக்கு ஒரு மொழி படம் என்கிற சொல்லை உடைத்துள்ளது. 

மேலும் செய்திகளுக்கு...கேஜிஎஃப் 2 வெற்றி.. 'இந்தி தேசிய மொழியாகும் வாய்ப்பு போனது ..பகிரங்கமாக போட்டுடைத்த கிச்சா சுதீப்

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற I am R பட விழாவில் பேசிய பிரபல நடிகர் கிச்சா சுதீப் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் கேஜிஎஃப்: அத்தியாயம் 2 வெற்றி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சுதீப், ''பான் இந்தியா படம் கன்னடத்தில் தயாரிக்கப்பட்டதாக சொன்னீர்கள். ஒரு திருத்தம். இந்தி இனி தேசிய மொழி கிடையாது. பாலிவுட்டிலும் பான் - இந்தியா திரைப்படங்களை தயாரிக்கிறார்கள். அவர்கள் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெற்றியை பெற போராடுகிறார்கள். ஆனால் நாங்கள் எங்கும் வெற்றி பெறுகிறோம்" என பெருமிதமாக பேசி இருந்தார்.

சுதீப்பின் இந்த கருத்து பாலிவுட் வட்டாரத்தை சூடாக்கியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் ட்வீட் செய்திருந்த பிரபல பாலிவுட் நடிகர் அஜய் 'அன்பு சகோதரரே, உங்கள் கூற்றுப்படி இந்தி தேசிய மொழி இல்லை எனில் எதற்காக உங்கள் மொழி படங்களை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள்? இந்தி எப்பொழுதும் நம்முடைய தாய் மொழி! தேசிய மொழியாக இருந்துள்ளது. எப்போதும் இருக்கும். ஜன கண மண!' என இந்தியில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...‘பீஸ்ட்’டுக்கு முடிவுகட்டிய ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’... இரண்டே வாரத்தில் முடிவுக்கு வந்த விஜய்யின் ஆட்டம்

Scroll to load tweet…
Scroll to load tweet…

உடனடியாக பதில் அளித்த சுதீப்; 'நான் எந்த அர்த்தத்தில் அந்த கருத்தை வெளியிட்டேனோ அது முற்றிலும் வேறு விதமாக உங்களை வந்தடைந்திருக்கிறது என கருதுகிறேன். இந்த கருத்தை எதற்காக நான் கூறினேன் என்பதை நேரில் உங்களை சந்திக்கும் போது நிச்சயம் விளக்குகிறேன்.என குறிப்பிட்ட சுதீப். 

Scroll to load tweet…
Scroll to load tweet…

இதோடு தொடர்ந்து தனது நிலைப்பாட்டையும் விளக்கும் விதமாக 'அஜய்தேவ்கன் சார், நீங்கள் இந்தியில் போட்ட ட்வீட்டை நான் படித்து புரிந்து கொண்டேன். நாங்கள் இந்தியை மதித்து விரும்பி கற்று கொண்டதே இதற்கு காரணம் ஆகும். இதை நான் குற்றமாக சொல்லவில்லை, ஒருவேளை நான் உங்களுக்கான இந்த பதிலை கன்னடத்தில் ட்வீட் செய்திருந்தால் உங்கள் சூழ்நிலை எப்படி இருக்கும் என ஆச்சரியப்படுகிறேன். நாங்களும் இந்தியாவை சேர்ந்தவர்கள் தான் இல்லையா?' எனவும் கேள்வி எழுப்பி உள்ளார் சுதீப்.

Scroll to load tweet…
Scroll to load tweet…

பிரபல நடிகர்களின் இந்தி குறித்த அனல் பறக்கும் விவாத மேடையாக சமூக வலைத்தளம் தற்போது திண்டாடி வருகிறது. இதுபோன்று சினிமா பிரபலங்கள் மொழி போரில் ஈடுபடுவது பிற மொழி பிராந்தியங்களிடையேயான சகோதர தன்மையை குறைக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.