- Home
- Cinema
- ‘பீஸ்ட்’டுக்கு முடிவுகட்டிய ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’... இரண்டே வாரத்தில் முடிவுக்கு வந்த விஜய்யின் ஆட்டம்
‘பீஸ்ட்’டுக்கு முடிவுகட்டிய ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’... இரண்டே வாரத்தில் முடிவுக்கு வந்த விஜய்யின் ஆட்டம்
Beast movie : பீஸ்ட் திரைப்படம் வெளியாகி 2 வாரங்களே ஆகும் நிலையில், பெரும்பாலான திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டு உள்ளது. இதற்கு காரணம் விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் தான்.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். மேலும் ஷான் டாம் சாக்கோ, சதீஷ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், செல்வராகவன், யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
அனிருத் இசையமைத்திருந்த இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை காரணமாக இப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்று தோல்வியை சந்தித்தது. இப்படம் விமர்சன ரீதியாக சறுக்கலை சந்தித்தாலும் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது.
இந்நிலையில், பீஸ்ட் திரைப்படம் வெளியாகி 2 வாரங்களே ஆகும் நிலையில், பெரும்பாலான திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டு உள்ளது. இதற்கு காரணம் விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் தான். இன்று அப்படம் பிரம்மாண்டமாக ரிலீசாகி உள்ளதால் பீஸ்ட் படத்தை தூக்கிவிட்டு இப்படத்தை திரையிட்டுள்ளனர்.
மறுபுறம் பீஸ்ட்டுக்கு போட்டியாக வெளியான கே.ஜி.எஃப் 2 திரைப்படம் வெற்றிநடை போட்டு வருகிறது. 2 வாரங்கள் ஆகியும் அப்படத்திற்கு மவுசு குறையாமல் இருப்பதால் அப்படம் தொடர்ந்து திரையிடப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் பீஸ்ட் படத்துடன் போட்டி போட்டு வந்த கே.ஜி.எஃப் 2 திரைப்படம் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்துக்கும் டஃப் கொடுத்து வருகிறது.
இதையும் படியுங்கள்... Kaathuvaakula Rendu Kaadhal Review : ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா? - முழு விமர்சனம்