பிரபல பாலிவுட் நடிகை கஜோல் குடும்பத்தில், அரங்கேறியுள்ள சோகத்திற்கு, பல பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

நடிகை கஜோலின் கணவர் நடிகர் அஜய் தேவ்கன் அப்பாவும், பாலிவுட்டில் மிகவும் பிரபலமான ஸ்டண்ட் மாஸ்டர்களில் ஒருவரான வீரு தேவ்கன் , இன்று காலை (மே 27)  உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார். 

அஜய் தேவ்கனின் தந்தை ... வீரு தேவ்கன் பாலிவுட் திரையுலகில்  இயக்குநராகவும் சாதித்தவர், அஜய் தேவ்கன் மற்றும் அமிதாப் பச்சனை வைத்து,  ஹிந்துஸ்தான் படத்தை இயங்கியவர். "

இதுவரை 80 க்கும் மேற்பட்ட ஹிந்தி படங்களில் ஒளிப்பதிவாளராகும், ஸ்டண்ட் மாஸ்டராகவும் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளார். இவருடைய மறைவிற்கு பிரபலங்கள் பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.