தமிழகத்தில் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில், அடுத்தடுத்து பல படங்கள் ஓடிடி தளத்திலும், சில படங்கள் நேரடியாக தொலைக்காட்சிகளிலும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'பூமிகா' திரைப்படம், நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாக உள்ள நிலையில், ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில், அடுத்தடுத்து பல படங்கள் ஓடிடி தளத்திலும், சில படங்கள் நேரடியாக தொலைக்காட்சிகளிலும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'பூமிகா' திரைப்படம், நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாக உள்ள நிலையில், ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழ் சினிமாவில், மற்ற இளம் நாயகிகளை விட சற்று வித்தியாசமான கதையை தேர்வு செய்து நடிப்பது மட்டும் இன்றி, நடிப்புக்காக பல ரிஸ்குகளையும் எடுக்க தயாராக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரின் உண்மையான உழைப்புக்கு மிகப்பெரிய அங்கீகாரமாக அமைந்தது 'காக்க முட்டை' மற்றும் 'கனா'. இந்த படங்களினால் கிடைத்த பெயரை தக்க வைத்து கொள்ள தொடர்ந்து, கதையின் நாயகியாக நடிக்கும் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

மேலும் செய்திகள்: நழுவி விழும் மெல்லிய சேலையில்... கவர்ச்சி அதகளம் செய்த நிதி அகர்வால்..! பட் மேக்அப் தான் ரொம்ப ஓவர்..!

இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் ஓடிடி தளத்தில் வெளியான கா.பெ.ரண சிங்கம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்தடுத்த படங்களும் தொடர்ந்து ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படும் என்கிற அறிவிப்பு வெளியாகி வருகிறது. நேற்றைய தினம் இவர் நடிப்பில் உருவாகி இருந்த மிஸ்ட்ரி திரில்லர் படமான 'திட்டம் இரண்டு' சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் செய்திகள்: காதலன் விக்கியுடன் சேர்ந்து புது பிசினஸில் முதலீடு செய்த நயன்தாரா... உங்கள புரிஞ்சிக்கவே முடியலயே..!

இதை தொடர்ந்து சற்று முன் வெளியாகியுள்ள தகவலின் படி, இயக்குனர் ரவீந்திரன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ஹாரர் திரைப்படமான 'பூமிகா' நேரடியாக விஜய் டிவி தொலைக்காட்சியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷின் 25 ஆவது படமாக உருவாகியுள்ள 'பூமிகா' ஆகஸ்ட் 22 ஆம் தேதி மதியம் 3 மணிக்கு வெளியாக உள்ளது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பின்னர் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Scroll to load tweet…