இயக்குநர் செல்வராகவன், தனுஷ், யுவன் சங்கர் ராஜா கூட்டணி என்றாலே திரையில் பட்டையைக் கிளப்பும் ட்ரீட் கன்பார்ம் என்பது ரசிகர்களுக்கு நன்றாக தெரியும். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், என்.ஜி.கே வரை செல்வராகவன் - யுவன் சங்கர் ராஜா கூட்டணி தொட்டதெல்லாம் ஹிட்டு தான். தற்போது அந்த கூட்டணி 8வது முறையாக ஒன்றிணைந்துள்ளது. 

அசுரன், கர்ணன் படத்தை தொடர்ந்து கலைப்புலி எஸ்.தாணு இயக்க உள்ள அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க உள்ள அனைவரும் அறிந்த செய்தி. அந்த படத்தை செல்வராகவன் தான் இயக்க உள்ளதாக கூறப்பட்டது. தற்போது இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை செல்வராகவன் வெளியிட்டுள்ளார். அதில், 8வது முறையாக யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி என்று குறிப்பிட்டு யுவன் ஷங்கர் ராஜாவுடன் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றை செல்வராகவன் பகிர்ந்துள்ளார். 

இதையும் படிங்க: விஜய் தலைக்கு மேல் தொங்கும் கத்தி... இறுதி அறிக்கை தயாரிப்பில் வருமான வரித்துறை தீவிரம்...!

தனுஷ் - செல்வராகவன் - யுவன் ஷங்கர் ராஜா இந்த மூவர் கூட்டணிக்கென்றே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. இவர்கள் படைப்பில் வெளியான அத்தனை பாடல்களுமே மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. செல்வராகவன் படங்களில் யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை தனி வலிமை சேர்ப்பது வழக்கம். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. பிற நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.