நேற்றைய தினம், ஏவிக்ஷன் பிரீ டிக்கெட் டாஸ்கில், சுரேஷ் குரூப்பிஸம் உள்ளதாக கூறி அனைவரையும் அதிர வைத்தார். இதனால் ரியோ உட்பட பல போட்டியாளர்கள் இவர் மீது செம்ம காண்டில் சுற்றி கொண்டிருக்கிறார்கள். இந்த வாரம் தலைவர் என்பதால் அவர் ஏவிக்ஷன் படலத்தில் இருந்து தப்பித்தாலும், அடுத்த வாரம் அதிக நபர்களால் இவருடைய பெயர் நாமினேட் செய்யப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இன்றைய முதல் ப்ரோமோவில் அனிதாவுடன் டூயட் ஆடிய சுரேஷ் சக்ரவர்த்தி, இரண்டாவது ப்ரோமோவில்... ரியோவிடம் வசமாக சிக்குகிறார்.

ரியோ சுரேஷிடம் வந்து, இந்த வீட்டில் குரூப்பிஸம் இருக்கு என அடித்து சொல்கிறீர்கள் என கூறுகிறார். இதற்கு சுரேஷ் நான் யார் என குறிப்பிட்டு கூற விரும்பவில்லை என்றதும், ரியோ நீங்கள் பேசும் போது பச்சையாக தெரிகிறது என்னை பற்றி தான் பேசுறீங்க என்பது என சொல்கிறார். இதற்கு சுரேஷ், குரூப்பிஸம் இருக்குனு நான் கூறுவதாக நீங்கள் நினைக்கறீங்க. நிஷா உங்களுக்கு வெளியில் இருக்கும் போதே ஃபிரென்ட் என ஏதோ அவரை பற்றி கூறுகிறார். பின்னர் நான் வீக் ஆவேன் என நீங்கள் செய்து கொண்டிருக்கும் செயல்கள் என்னை வீக் ஆக்க வில்லை என கூலாக தெரிவிக்கிறார்.

சுரேஷ் குரூப்பிஸம் இருக்கு என்று கூறுவதில் உண்மை இல்லை என்றால் ஏன், ரியோ இந்த பிரச்னையை பற்றி இப்படி தீவிரமாக பேச வேண்டும். ஒரு வேலை இருப்பதால் தான் புகைகிறதோ என்கிற சந்தேகம் ரசிகர்கள் மனதிலும் வந்து விட்டது.

தற்போது வெளியாகியுள்ள புரோமோ இதோ...