அஜித்தின் ஏகே 64 டைரக்டர் இவர் தானா? அறிவிப்பிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்
விடாமுயற்சி படத்திற்காக இரண்டு ஆண்டுகள் ரசிகர்களை காக்க வைத்து விட்டதால், இனியும் ரசிகர்களை காக்க வைக்க வேண்டாம் என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாக நடித்து வருகிறார் அஜித். தற்போது குட் பேட் அக்லி படத்தின் வேலைகள் முடிந்து விட்டதால் அடுத்த படமான ஏகே 64 படத்தை யார் இயக்க போகிறார் என்ற பேச்சும் தீவிரமாக எழுந்துள்ளது.

சென்னை : அஜித்தின் குட் பேக் அக்லி படத்தின் அப்டேட்கள், சுவாரஸ்ய தகவல்கள் ஒரு பக்கம் போய் கொண்டிருந்தாலும், அஜித்தின் அடுத்த படமான ஏகே 64 படத்தில் அஜித்தை இயக்க போவது யார் என்ற கேள்வி தீவிரமாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த விடாமுயற்சி படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் எப்போது ரூ.100 கோடி கிளப்பில் இணையும்? இணையுமா? இணையாதா? என அனைவரும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கையில், அஜித்தின் அடுத்த படமான குட் பேட் அக்லி படமும் ரசிகர்களிடம் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இயக்கி வரும் குட் பேட் அக்லி படம் இந்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தின் இறுதிக் கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
ஏகே 64 டைரக்டர் இவரா?
குட் பேட் அக்லி படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால் அஜித்தின் அடுத்த படமான ஏகே 64 படத்தை இயக்க போகும் அந்த டைரக்டர் யார் என்ற கேள்வியும் கோலிவுட் வட்டாரத்தில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. கோலிவுட் வட்டார தகவல்களின் படி இரண்டு டைரக்டர்களின் படம் தான் ஏகே 64 படத்திற்காக அதிகம் பரிந்துரைக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. கோலிவுட்டில் பரவி வரும் தகவல்களின் படி, தமிழ் சினிமாவின் டாப் டைரக்டர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ், ஏகே 64 படத்தை இயக்குவதற்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
அழுத்தமான, தனித்துவமான, ஸ்டையிலான கதைகளை சொல்லுவதில் வல்லவர் கார்த்திக் சுப்புராஜ் என்பதால் அஜித்திற்காக இவர் கதை ஒன்றை தயார் செய்து வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை ஏகே 64 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவது உறுதியானால், இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பார் என சொல்லப்படுகிறது. சூப்பர் ஹிட் பாடல்களை கொடுக்கும் டாப் மியூசிக் டைரக்டர் என்பதால் ஏகே 64 படத்திற்கு இவரை தேர்வு செய்வதற்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
லிஸ்டில் இவரும் இருக்காரா?
அஜித் படத்தை இயக்கப் போகும் டைரக்டர்களின் பெயர்களில் பல வருடங்களாக பேசப்பட்டு வரும் ஒருவர் என்றால் அது விஷ்ணுவர்த்தன் தான். அஜித்தின் பிளாக் பஸ்டர் படங்களில் ஒன்றான பில்லா, பில்லா 2 படங்களை இயக்கி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். இவர் அஜித்தை மீண்டும் எப்போது இயக்குவார், பில்லா 3 வருமா என பல ஆண்டுகளாக சினிமா வட்டாரத்தில் ஒரு கேள்வி உலாவிக் கொண்டிருக்கிறது. விஷ்ணுவர்த்தனும் ஒவ்வொரு முறையும் சூசகமாக பதிலளித்து வருகிறார். இதனால் ஏகே 64 படத்தை இவர் இயக்குவதற்கு வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இவருக்கும் வாய்ப்புள்ளது :
இவர்கள் இருவர் மட்டுமல்ல மூன்றாவதாக விக்னேஷ் சிவனின் பெயரும் அஜித்தின் அடுத்த பட டைரக்டர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே விடாமுயற்சி படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. ஆனால் கடைசி நிமிடத்தில் மகிழ் திருமேனி இயக்குவது முடிவானது. அதற்கு பிறகு ஏகே 63 படத்தையாவது விக்னேஷ் சிவன் இயக்குவார் என சொல்லப்பட்ட நிலையில், ஆதிக் ரவிச்சந்திரனின் பெயர் அறிவிக்கப்பட்டது. இரண்டு முறை மிஸ் ஆகி விட்டதால் ஏகே 64 படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
ஏகே 64 யார் என்பது விரைவில் முடிவு செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாம். அப்படி அறிவிக்கப்பட்டால் இந்த படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.