விவாகரத்துக்கு பிறகு இதுவே முதன்முறை.. ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா - நாக சைதன்யா.. ஆனால்..

விவாகரத்துக்கு பிறகு நாக சைதன்யா மற்றும் சமந்தா அமேசான் பிரைம் வீடியோ சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்டனர்

After divorce Samantha Ruth prabhu Naga chaitanya participate in same event for first time Rya

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனவர். இந்த ஜோடியின் பிரமாண்டமான திருமணம் 2017 இல் நடந்தது. ஆனால் சமந்தா - நாக சைதன்யாவின் திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை, மேலும் 2021 இல் இந்த ஜோடி தங்கள் பிரிவை அறிவித்தனர்.. பின்னர் சமந்தா தனது திரைப்பட வேலைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது மேலும் அவர் தமிழ் மற்றும் தெலுங்கில் தொடர்ந்து படங்களை வழங்கி வருகிறார். நாக சைதன்யாவும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விவாகரத்துக்கு பிறகு நாக சைதன்யா மற்றும் சமந்தா அமேசான் பிரைம் வீடியோ சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்டனர்.விவாகரத்துக்குப் பிறகு நாக சைதன்யாவும், சமந்தாவும் ஒரே நிகழ்வில் கலந்துகொண்டது அரிதான இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது..

 

சமந்தா தற்போது வருண் தவானுடன் இணைந்து சிட்டாடலின் இந்தியத் தழுவலான "சிட்டாடல்: ஹனி பன்னி" என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். மயோசிடிஸ் நோயிலிருந்து மீண்ட பிறகு சமந்தாவின் முதல் பிராஜக்ட் இதுதான். . இந்த வெப் சீரிஸ் ரிலீஸ் தொடர்பான நிகழ்ச்சியில் தான் சமந்தா கலந்து கொண்டார்.

நெகட்டிவ் விமர்சனம் கிடைத்தாலும் கோடிக்கணக்கில் கல்லா கட்டும் சன்பிக்சர்ஸ்.. பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த ஜெயிலர்..

மறுபுறம், இந்த நிகழ்வில் நாக சைதன்யாவும் கலந்து கொண்டார், தெலுங்கில் வெற்றி பெற்ற "தூதா" வெப் தொடரின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தனது அணியினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். 

 

சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் ஒரே நிகழ்வில் கலந்து கொண்டது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அவர்கள் விவாகரத்து செய்த போதிலும், தங்கள் வெப் சீரிஸின் புரோஷன் பணிகளுக்காகவே தனித்தனியாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆனால் இந்த நிகழ்ச்சியில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

பெண்களை வார்த்தைகளால் கற்பழிப்பது கொடூரத்தின் உச்சம்... ஆதங்கத்தை கொட்டிய அறந்தாங்கி நிஷா

இதனிடையே இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ரா, சூர்யா, பாபி தியோல், ஷாகித் கபூர் தமன்னா, நாகசைதன்யாவின் காதலி என்று கூறப்படும் ஷோபிதா துலியாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios