இந்தியாவில் கொரோனா வைரஸின் கொடூர தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 210க்கும் மேற்பட்ட நாடுகளை கதி கலங்க வைக்கும் கொரோனா வைரஸால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரிக்கிறது. தற்போது சமூக விலகலை கடைபிடிப்பது மட்டுமே ஒரே வழி என்பதால் உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நான்காம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை, பூங்கா, அருங்காட்சியகத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள், வணிக வளாகங்கள்  மூடப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: சாகும் வரை நடிகை ஸ்ரீதேவி பயந்து நடுங்கிய ஒரே நபர்... ஆனால் தப்பா எதுவும் நடக்கல?

கடந்த மார்ச் மாதம் முதல் ஷூட்டிங் நடத்தப்படாததால் திரையுலகம் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்நிலையில் பல கட்ட கோரிக்கைகளுக்கு பிறகு போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளையும், சீரியல் ஷூட்டிங்கையும் நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தியேட்டர்கள் திறக்கப்படாததால் தயாராக உள்ள புதிய படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர்கள் திண்டாடி வருகின்றனர். தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது எப்படி?, மக்கள் முன்பை போல் தியேட்டர்களுக்கு வருவார்களா? என ஏகப்பட்ட கேள்விகள் எழுகின்றன. 

இதையும் படிங்க: பெற்ற தாயிடமே மகளை படுக்கைக்கு அழைத்த இயக்குநர்... கதறிய பிரபல குழந்தை நட்சத்திரம்...!

தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் சில நாடுகளில் மட்டும் கடற்கரை, உணவகங்கள், தியேட்டர்கள் போன்ற பொழுது போக்கு இடங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. துபாயில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. 2மீட்டர் இடைவெளியில் அமர வேண்டும், டிஜிட்டல் பணப்பரிமாற்றம், சானிடைசர்களை பயன்படுத்துதல், மாஸ்க் அணிவது கட்டாயம், 30 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப அனுமதி, உடல் வெப்ப நிலை பரிசோதனை, ஊழியர்கள் மாஸ்க், கையுறை அணிவது கட்டாயம் என பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இதையும் படிங்க: ஆபாச படம் பார்த்த தமன்னா... ஜாலிக்காக நண்பர் வீட்டில் செய்த கேவலமான வேலை... வைரலாகும் வீடியோ...!

துபாயில் தமிழர்களும், மலையாளிகளும் அதிகம் வசிப்பதால் அங்குள்ள தியேட்டரில் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்யப்பட்ட கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ரொமாண்டிக் காமெடி மூவி மீண்டும் திரையிடப்பட்டுள்ளது. புதிதாக படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாத சமயத்தில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளது எப்படிப்பட்ட வரவேற்பை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.