Asianet News TamilAsianet News Tamil

அஜித் வருகையால் துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள்!இணை செயலாளர் கோபிநாத் தகவல்!

எழும்பூரில் உள்ள பழைய கமிஷனர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சென்னை ரைபிள் கிளப்பில் மாணவர் பயிற்சி நடத்தபடுகிறது. கிளப்பில் முன்பதிவு அடிப்படையில் மாணவ உறுப்பினர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் சேர்க்கை துவங்க பட்டுள்ளது. தற்போது இந்த கிளப் அதன் தலைவர் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் அவர்கள் தலைமையிலும், துணைத் தலைவர் அமல்ராஜ் ஐபிஎஸ் அவர்களின் மேற்பார்வையிலும் இயங்குகிறது. 
 
after ajith create record youngsters more concentrate for pistil shooting
Author
Chennai, First Published Mar 10, 2021, 11:14 AM IST

எழும்பூரில் உள்ள பழைய கமிஷனர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சென்னை ரைபிள் கிளப்பில் மாணவர் பயிற்சி நடத்தபடுகிறது. கிளப்பில் முன்பதிவு அடிப்படையில் மாணவ உறுப்பினர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் சேர்க்கை துவங்க பட்டுள்ளது. தற்போது இந்த கிளப் அதன் தலைவர் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் அவர்கள் தலைமையிலும், துணைத் தலைவர் அமல்ராஜ் ஐபிஎஸ் அவர்களின் மேற்பார்வையிலும் இயங்குகிறது. 

மேலும் செய்திகள்: விக்ரம் - துருவ் நடிக்கும் படத்தின் முக்கிய பிரபலம் திடீர் மாற்றம்! அதிகாரபூர்வமாக வெளியான தகவல்!
 
கௌரவ செயலர் ராஜசேகர் பாண்டியன் கூறும்போது, துப்பாக்கிச் சுடுதலை கற்றுக் கொண்டு அதில் சிறந்து விளங்க ஆர்வம் இருந்தும் வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு இந்த பயிற்சி ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்து இருக்கிறது. இந்த மாணவர் பயிற்சி தொடங்கப்பட்டதன் நோக்கமே, துப்பாக்கிச் சுடுதல் என்பது ஒரு எட்டாக்கனி என்ற கருத்தை மாற்றத்தான். இந்த விளையாட்டை அனைத்து மாணவர்களுக்கும் சாத்தியமான ஒன்றாக ஆக்குவதே இந்த பயிற்சியின் குறிக்கோள் என்றார்.

after ajith create record youngsters more concentrate for pistil shooting

சென்னை ரைபிள் கிளப் மாணவர் பயிற்சி திட்டத்தை முன்னாள் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஐ.பி.எஸ் மற்றும் தேசிய ரைபிள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர்  டி.வி. சீதராமாராவ் ஆகியோர் துவக்கி வைத்தனர் என்பது குரிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: படுக்கையை பகிர்ந்தால் தான் பட வாய்ப்பு..! ஷாலு ஷம்முவின் மீடூ புகாரில் சிக்கிய பெரிய நடிகர் யார்?
 
கௌரவ இணை செயலாளர் எம்.கோபிநாத் கூறும்போது,  ஆர்வமுள்ள மாணவர்கள் தவிர சென்னையில் வசிக்கும் மற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டு மாணவர்கள் தேசிய அளவில் வேற்றிகளை குவிக்க இந்த பயிற்ச்சி உதவும் 
என்றார்.

after ajith create record youngsters more concentrate for pistil shooting

சமீபத்தில் நடந்து முடிந்த 46வது மாநில துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், பல்வேறு பிரிவுகளில் நடிகர் அஜித்குமார் ஆறு பதக்கங்களை வென்ற தனித்துவமான நிகழ்வுக்குப் பிறகு இளைஞர்கள் காட்டும் ஆர்வமும் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. அப்போட்டியில் குறிப்பாக கிளப்பின் மாணவர் உறுப்பினர்கள் சிறப்பாக விளையாடி முந்தைய சாதனைகளை முறியடித்தனர். 

மேலும் செய்திகள்:36 வயதில் விவாகரத்து... குழந்தை இல்லை..! சோகத்தை கூட சந்தோஷமாக மாற்றி டிடி செய்ததை பாருங்க!
 
ரைபிள் மற்றும் பிஸ்டலுக்கான தென் மண்டல துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் 9.3.2021 முதல் 13.3.2021 வரை வீராபுரத்தில் உள்ள தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு பட்டாலியன் துப்பாக்கிச் சுடுதல் மையத்தில் நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios