இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்கத்தில் தளபதி விஜய் பேராசிரியராக நடித்திருக்கும் திரைப்படம் 'மாஸ்டர்'. செம்ம ஸ்டைலிஷான வாத்தியை, பார்க்க அவருடைய ரசிகர்கள் மட்டும் இன்றி, அனைவருமே மரண வெயிட்டிங்.

விஜய்க்கு டஃப் கொடுக்கும் வில்லனாக நடித்து அசத்தி இருக்கிறார், நடிகர் விஜய்சேதுபதி. 'மாஸ்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று சரியாக 6 : 30 மணிக்கு துவங்க உள்ள நிலையில், இப்படம் பற்றிய பல தகவல்கள் அடுக்கடுக்காக வெளியாகி வருகிறது.

மேலும் செய்திகள்: விருது விழா மேடையில் சுழன்று சுழன்று சிலம்பம் சுத்திய ஜோதிகா! வைரலாகும் வீடியோ!
 

அந்த வகையில், 'மாஸ்டர்' படத்தின் ட்ராக் லிஸ்ட் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் ஒரு காதல்  பாடல் ஒன்றை, பிரபல இசையமைப்பாளர், யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார்.

மேலும் செய்திகள்: இணையத்தை கலக்கும் 'வாத்தி ஸ்டெப்' சேலஞ்சு! தெறிக்க விட்ட மாணவர்கள்... வீடியோ!

விஜய் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான, 'புதிய கீதை' படத்திற்கு இசையமைத்ததற்கு பின்னர், 17 வருடங்கள் கழித்து, 'மாஸ்டர்' படத்தில் விஜய்காக ஒரு பாடல் பாடியுள்ளார். 

ஏற்கனவே 'மாஸ்டர்'  திரைப்படத்தில் இருந்து குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங் மற்றும் வாத்தி ரெய்டு ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மற்ற பாடல்கள் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.